சம்பவா
Appearance
சம்பவா என்பது தெற்கு மடகாஸ்கரின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது சம்பவா மாவட்டம் மற்றும் சவா பகுதிகளின் தலைநகரமும் கூட. 2001 மக்கள்த்தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தில் 40,000 பேர் வசிக்கின்றனர். இந்நகருக்கு உள்ளூர் விமான சேவைகள் வழங்கப்படுகிறது. இங்குள்ள 45% மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது விவசாயமும், கால்நடை வளர்ப்புமாகும். இங்கு முக்கியமான பயிர் வெனிலா ஆகும். வேறு சில முக்கியமானவை தேங்காய் மற்றும் அரிசி ஆகும்.