மெய்நிகர் மரபுரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெய்நிகர் மரபுரிமை (Virtual heritage) என்பது, பண்பாட்டு மரபுரிமை தொடர்பான தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை சார்பான ஆக்கங்களையும் அவற்றின் பயன்பாட்டையும் குறிக்கும்.[1] மெய்நிகர் மரபுரிமையும், பண்பாட்டு மரபுரிமையும் வெவ்வேறு பொருள் கொண்டவை. பண்பாட்டு மரபுரிமை என்பது, வரலாற்று, அழகியல், தொல்லியல், அறிவியல், இனவியல், மானிடவியல் ஆகிய பெறுமானங்களைக் கொண்ட களங்கள், நினைவுச் சின்னங்கள், கட்டிடங்கள், பொருட்கள் போன்றவற்றைக் குறிக்கின்றது.[2] ஆனால், மெய்நிகர் மரபுரிமை என்பது தொழில்நுட்பக் களத்துக்குள் பெரும்பாலும் மெய்நிகர் நடப்புச் சூழல் அல்லது அரும்பொருட்களின் கணினிக் காட்சிகள் வடிவில் இருக்கும் மேற் சொல்லப்பட்டவைகளின் எடுத்துக்காட்டுகளை மட்டுமே குறிக்கும்.

பல மெய்நிகர் நடப்புத் திட்டங்கள் பண்பாட்டு மரபுரிமையின் தொட்டறியக்கூடிய அம்சங்களின் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக முப்பரிமாண மாதிரியாக்கம், வரைபடங்கள், அசைபடங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறு செய்யும்போது களங்களுடனும், பொருட்களுடனும் தொடர்புடைய பண்பாட்டு மரபுரிமையின் தொடுபுலனாகாத அம்சங்களான கதைகள், நிகழ்ச்சிகள், நடனங்கள் போன்றவற்றைக் கவனிக்காது விட்டுவிடுகின்றனர். பண்பாட்டு மரபுரிமையின் தொட்டறியக்கூடிய அம்சங்கள் தொடுபுலனாகாத அம்சங்களில் இருந்து பிரிக்கக்கூடியன அல்ல.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bawaya, M. (2010), "Virtual Archaeologists Recreate Parts of Ancient Worlds", Science, 327 (5962): 140–141, doi:10.1126/science.327.5962.140
  2. UNESCO (2008). "Application Guide". Applications to UNESCO-Vocations Patrimoine Fellowships for World Heritage site managers. [UNESCO World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 4 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்நிகர்_மரபுரிமை&oldid=2178643" இலிருந்து மீள்விக்கப்பட்டது