மெனெகினைட்டு
மெனகினைட்டு Meneghinite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்புக் கனிமம் |
வேதி வாய்பாடு | CuPb13 Sb7S24 |
இனங்காணல் | |
நிறம் | கருப்பும் சாம்பலும் கலந்த நிறம் |
படிக இயல்பு | பட்டகமும் ஊசியம், திரட்சியாக |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
பிளப்பு | {010} சரிபிளவு |
முறிவு | சங்குருவம் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 2 1⁄2 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | கருப்பு ஒளிரும் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 6.36 |
பலதிசை வண்ணப்படிகமை | பலவீனம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
மெனெகினைட்டு (Meneghinite) என்பது CuPb13 Sb7S24.[3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சல்போவுப்புக் கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது.
நேர்ச்சாய்சதுரப் படிக அமைப்பில் படிகமாகும் மெனெகினைட்டு மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2+1⁄2 என்ற அளவும் ஒப்படர்த்தி 6.36 என்ற அளவையும் வெளிப்படுத்துகிறது. {010} இல் சரிபிளவும் சங்குருவமும் கொண்டு கருப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் உலோகப் பளபளப்புடன் படிகமாகிறது.[3]
1852 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டின் உலூக்கா மாகாணத்தில் மெனெகினைட்டு கண்டறியப்பட்டது. பிசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் கியூசெப் கியோவானி அண்டோனியோ மெனெகினி நினைவாக கனிமத்திற்கு மெனெகினைட்டு என்று பெயரிடப்பட்டது.[4] போட்டினோ சுரங்கத்தில் இவர் கனிமத்தைக் கண்டுபிடித்தார்.[3]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் மெனெகினைட்டு கனிமத்தை Meg[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mineralienatlas
- ↑ http://rruff.geo.arizona.edu/doclib/hom/meneghinite.pdf Handbook of Mineralogy
- ↑ 3.0 3.1 3.2 3.3 Mindat information page for Meneghinite
- ↑ The Brown Reference Group plc, ed. (2007). "Meneghinite". Treasures of the Earth. De Agostini UK Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7489-7995-0.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.