உள்ளடக்கத்துக்குச் செல்

மெத்தில்வளையயெக்சனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெத்தில்வளையயெக்சனோன் (Methylcyclohexanone) என்பது வளையயெக்சனோனின் வழிப்பெறுதியாகக் கருதப்படுகிறது. அறியப்பட்டுள்ள மூன்று சமபகுதியங்களில் எதையும் இச்சேர்மம் குறிக்கும். 2-மெத்தில்வளையயெக்சனோன், 3-மெத்தில்வளையயெக்சனோன், 4-மெத்தில்வளையயெக்சனோன் என்பவை அம்மூன்று சமபகுதியங்களாகும்.[1]

மெத்தில்வளையயெக்சேனை ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தி இவற்றை உற்பத்தி செய்யலாம். தொடர்புடைய கிரெசால் சேர்மத்தை பகுதியளவு ஐதரசனேற்றம் செய்தும் இவற்றை தயாரிக்கலாம். மூன்று சமபகுதியங்களும் நீர்மநிலையில் காணப்படுகின்றன. 2-மெத்தில்வளையயெக்சனோன், 3-மெத்தில்வளையயெக்சனோன் இரண்டு நாற்தொகுதி மையங்களைக் கொண்டுள்ளன.

மெத்தில்வளையயெக்சனோன்கள்
சமபகுதியம் பதிவு எண் உருகுநிலை. (°செல்சியசு) கொதிநிலை. (°செல்சியசு) அடர்த்தி (கி/செ.மீ3)
2-மெத்தில்வளையயெக்சனோன் 583-60-8 −13.9 165.1 0.925
3-மெத்தில்வளையயெக்சனோன் 591-24-2 −73.5 170.0 0.920
4-மெத்தில்வளையயெக்சனோன் 589-92-4 −40.6 171.3 0.916

மேற்கோள்கள்

[தொகு]
  1. Musser, Michael Tuttle (2000). "Cyclohexanol and Cyclohexanone". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a08_217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தில்வளையயெக்சனோன்&oldid=3925935" இலிருந்து மீள்விக்கப்பட்டது