மெட்டா சின்னபார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெட்டா சின்னபார்
Metacinnabar
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுHgS
இனங்காணல்
நிறம்சாம்பல் கருப்பு
படிக இயல்புதிண்ணிய, அரிதாக நாற்கோண படிகங்களாக, செதிற்படிவுப் படலங்கள்
படிக அமைப்புகனசதுரம்
இரட்டைப் படிகமுறல்நுண்செதிலில் பொதுவாக {111} மீது
பிளப்புஇல்லை
முறிவுதுணைசங்குருவம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுஉலோகம்
கீற்றுவண்ணம்கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி7.7–7.8
மேற்கோள்கள்[1][2][3]

மெட்டா சின்னபார் (Metacinnabar) என்பது HgS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனசதுரப் படிகவடிவத்திலுள்ள பாதரச சல்பைடு ஆகும். உயர் வெப்பநிலை வடிவம், சின்னபார் (முக்கோண அமைப்பு), உயர் வெப்பநிலை மிகைசின்னபார் (அறுகோண அமைப்பு) என முப்படிக அமைப்பில் காணப்படுகிறது. பாதரச படிவுகளில் சின்னபார் கனிமத்துடன் பாதரசம், ஊர்ட்சைட்டு, சிடிப்னைட்டு, மார்கசைட்டு, இரியல்கர், கால்சைட்டு, பாரைட்டு, சால்கோடோனி மற்றும் ஐதரோகார்பன்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.[1]

மெட்டா சின்னபார் முதன்முதலில் 1870 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பப்லோ விரிகுடாவிற்கு வடக்கே அமைந்துள்ள நாபா மாகாணத்தின் உள்ளூர் நகராட்சி ஆணையத்தால் ஆளப்படாத ஒரு பிராந்தியமான நாக்சுவில்லியில் உள்ள ரெடிங்டன் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டா_சின்னபார்&oldid=3936378" இலிருந்து மீள்விக்கப்பட்டது