உள்ளடக்கத்துக்குச் செல்

மெக் லானிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக் லானிங்

2020 ஐசிசி மகளிர் இருபது-20 உலகக்கோப்பையில் மெக் லானிங்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மெகன் மொய்ரா லானிங்
பிறப்பு25 மார்ச்சு 1992 (1992-03-25) (அகவை 32)
சிங்கப்பூர்
பட்டப்பெயர்மெகாஸ்டார், சீரியஸ் செல்லி
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது கை மித வேகம்
பங்குடாப் ஆர்டர் பேட்டர்
உறவினர்கள்வேய்ன் (தந்தை)
சூய் (தாயார்)
ஆன்னா லானிங் (தங்கை)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 164)11 ஆகத்து 2013 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு27 சனவரி 2022 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 119)5 சனவரி 2011 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப21 சனவரி 2023 எ. பாகிஸ்தான்
ஒநாப சட்டை எண்17
இ20ப அறிமுகம் (தொப்பி 32)30 டிசம்பர் 2010 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப26 பிப்ரவரி 2023 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப சட்டை எண்17
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008/09–தற்போது வரைவிக்டோரியா
2015/16–2017/18மெல்போர்ன் ஸ்டார்ஸ்
2018ஐபிஎல் சூப்பர்நோவாஸ்
2018/19–2019/20பெர்த் ஸ்கோசேர்ஸ்
2020/21–presentமெல்போர்ன் ஸ்டார்ஸ்
2023டில்லி கேபிட்டல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ம.ஓ.நா.ப ம.இ-20.ப
ஆட்டங்கள் 6 103 132
ஓட்டங்கள் 345 4,602 3,405
மட்டையாட்ட சராசரி 31.36 53.51 36.61
100கள்/50கள் 0/2 15/21 2/15
அதியுயர் ஓட்டம் 93 152* 133*
வீசிய பந்துகள் 48 132 36
வீழ்த்தல்கள் 0 1 4
பந்துவீச்சு சராசரி 114.00 9.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/30 2/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 53/– 45/–
மூலம்: ESPNcricinfo, 9 நவம்பர் 2023

மெகன் மொய்ரா லானிங் (பிறப்பு: 25 மார்ச் 1992) ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். லானிங் ஆத்திரேலிய தேசிய மகளிர் அணியின் தலைவராக 2014 முதல் 2023 வரை இருந்தவர். மேலும், இரண்டு பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை மற்றும் ஐந்து ஐசிசி மகளிர் உலக இருபது-20 உலகக்கபோப்பை தொடர்கள் வென்ற அணியில் இடம்பெற்றவர். மகளிர் துடுப்பாட்ட போட்டிகளில் அதிக சத்தங்களை அடித்தவர் என்ற பெருமை பெற்ற வீராங்கனை ஆவார்.

உள்ளூர் துடுப்பாட்டத்தில் விட்ட்டோரை அணிக்காகவும், மகளிர் பிக் பேஷ் லீகில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காகவும் லானிங் விளையாடுகிறார். [1] மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைவராகவும் உள்ளார். நவம்பர் 9, 2023 அன்று அவர் சர்வதேச துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். [2]

சர்வத்தேச துடுப்பாட்டம்[தொகு]

லானிங் சர்வதேச மகளிர் இருபது-20 போட்டிகளில் 30 டிசம்பர் 2010-ல் நியுஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.[3] பின்னர் 2011-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மகளிர் ஒரு நாள் துடுப்பாட்ட வகைப் போட்டிகளில் அறிமுகமானார்.[4] 2012 மகளிர் உலக இருபது-20 உலகக்கபோப்பை வென்ற ஆத்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார்.[5] மேலும் 2013 பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை வென்ற ஆத்திரேலிய அணியிலும் இடம் பெற்றிருந்தனர்.[6]

2013 மகளிர் ஆஷஸ் தொடரின் போது தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார்.[7]

2017 உலகக்கோப்பையின் போது

2014-ல் ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[8][9] தொடர்ந்து, 2014 மகளிர் உலக இருபது-20 உலகக்கபோப்பையில் ஆத்திரேலிய அணியை வழிநடத்தி கோப்பையை வென்றார்.

2015-ல் முதல் முறையாக மகளிர் ஆஷஸ் தொடரை தலைவராக வென்றார்.[10]

2017 உலகக் கோப்பையில் அரையிறுதியில் தோற்றாலும், 2018 மகளிர் இருபது-20 உலகக்கோப்பையில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பையை வென்றார்.[11]

2020-ல் நான்காவது முறையாக மகளிர் 20-20 உலகக்கோப்பையை வென்றார்.[12]

2022-ல் இரண்டாவது முறையாக பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பையை வென்றார். மேலும், 2023 மகளிர் துடுப்பாட்ட 20-20 உலகக்கோப்பை தொடரில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பையை வென்றார். 2023 இருபது-20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிதான் மெக் லானிங் விளையாடிய கடைசி சர்வதேச போட்டி.
மேற்கோள்கள்[தொகு]

 1. "Players | Melbourne Stars - BBL". பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
 2. "Lanning retires from international cricket at 31 | cricket.com.au". பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
 3. "Full Scorecard of New Zealand Women vs Australia Women 2nd T20I 2010 - Score Report | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
 4. "Full Scorecard of Australia Women vs England Women 1st ODI 2011 - Score Report | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
 5. "ICC Women's World Twenty20, 2012/13 Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
 6. "Full Scorecard of Australia Women vs West Indies Women Final 2013 - Score Report | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
 7. "Full Scorecard of Australia Women vs England Women Only Test 2013 - Score Report | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
 8. "Lanning to captain Aus women at World T20". SBS News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
 9. "Lanning confirmed as Southern Stars captain". www.abc.net.au (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). 2014-06-13. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
 10. "Recent Match Report - Australia Women vs England Women 2nd T20I 2015 | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
 11. "Get Ball by Ball Commentary of England Women vs Australia Women Final 2018 | ESPNcricinfo.com". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
 12. "Captain Lanning joins exclusive World Cup club". wwos.nine.com.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்_லானிங்&oldid=3824624" இலிருந்து மீள்விக்கப்பட்டது