மெகாலியம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மெகாலியம் (Megallium) என்பது 60% கோபால்ட்டு, 20% குரோமியம், 5% மாலிப்டினம் மற்றும் குறைவான விழுக்காடுகளில் இதர பொருட்கள் கலந்த கலப்புலோகத்தின் வணிகப்பெயர் ஆகும். இந்த கலப்புலோகமானது இதன் குறைவான எடையின் காரணமாகவும், அரிமானத்திற்கு எதிரான தன்மையின் காரணமாகவும், குறைவான ஒவ்வாமை ஊக்கப் பண்பு (நிக்கல் இல்லாத) தன்மையின் காரணமாகவும் பல் மருத்துவத்துறையில் பயன்படுகிறது.1951 ஆம் ஆண்டில் சான் இலியோனாட்டு என்பவரால் ஆட்டென்பரோ பல் மருத்துவ ஆய்வகத்திற்காக தயாரிக்கப்பட்டது.