மூளைமின்னலை வரவு
Appearance
மூளைமின்னலை வரவு | |
---|---|
இடையீடு | |
An EEG recording net (Electrical Geodesics, Inc.[1]) being used on a participant in a brain wave study | |
ICD-9-CM | 89.14 |
MeSH | D004569 |
OPS-301 code: | 1-207 |
மூளைமின்னலை வரவு (Electroencephalography, EEG) என்பது பெருமூளைப் புறணியில் உள்ள பெருமளவிலான நியூரான்கள் அடங்கிய உறுப்புகளுக்கிடையே காணப்படும் சீரான மின்னோட்ட அலைவுகளை எலக்ட்ரோடுகளின் உதவியுடன் பதிவு செய்யும் முறையைக் குறிக்கும்[2]. இக்கருவி அனைத்து நியூரான்களின் மின்னோட்டத் திறனைத் தோராயமாகப் பதிவு செய்கிறது. இதன் மூலம் மூளையினுடைய செயலைக் கண்டறியலாம். குறிப்பாகப் பல்வேறு வேலைகளில் ஈடுபடும் போதும், உறக்கத்தின் போதும், விழித்திருக்கும் நிலையிலும் மூளையினுடைய செயல்களை அறியலாம். மேலும் இக்கருவியின் உதவியினால் மூளை தொடர்பான நோய்களான, புற்றுநோய்கட்டி, புண்கள் போன்ற நோய்களையும், வலிப்பினையும் கண்டறியலாம்.