உள்ளடக்கத்துக்குச் செல்

மூங்கிலரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூங்கிலரியை ஒத்த ஒரு வகை மூங்கில் விதைகள்.

மூங்கிலரிசி என்பது மூங்கிலில் விளையும் ஒரு வகை விதையிலிருந்து கிடைக்கும் சிறு தானியம் ஆகும்.

மூங்கில்களில் விளையும் அரிசி

[தொகு]

மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் எப்போதோ ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வு. மூங்கில்கள் அதன் ஆயுள் முடியும் காலகட்டத்தில்தான் பூக்கின்றன. ஒரு முறை பூத்த பிறகு, விதைகளை உற்பத்தி செய்துவிட்டு அவை இறந்துவிடுகின்றன. விதைகளை உற்பத்தி செய்யும்போது அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அதற்குப் பிறகு மூங்கில் இறந்துவிடுகிறது என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. மூங்கில் பூக்கும் காலத்தில் கொறிவிலங்குகளில் எலிகளுக்க நல்ல உணவு கிடைப்பதால் இவற்றின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிடுகிறது. மிசோரம் மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக, எப்போழுதெல்லாம் மூங்கில்கள் பூக்கின்றனவோ, அப்போழுதெல்லாம் தவறாமல் பஞ்சம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். மூங்கில் அரிசியை மருத்துவக் குணம் மிக்கதாகக் கருதுவதால், மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். விலையும் அதிகமாக இருக்கிறது.[1]

மூங்கில் நெல் என்று ஒன்று இருக்கிறது. அது 60 வருடங்கள் முன் வரை தமிழகத்தில் விளைந்ததாகவும் பின்னர் பொமுப் பயன்பாட்டில் இல்லாமல்போய் அண்மையில் மீண்டும் விளைவிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "எலிகளை ஈர்க்கும் மூங்கில் பூக்கள்". தி இந்து (தமிழ்). 2016 -சூன் 1. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கிலரிசி&oldid=3862982" இலிருந்து மீள்விக்கப்பட்டது