முருகுப்பிள்ளை மயில்வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முருகுப்பிள்ளை மயில்வாகனம் என்பவர் "மயிலன்" என்ற புனைபெயரில் எழுதிய ஒர் ஈழத்துக் கவிஞர். யாழ்ப்பாண மாவட்டம், அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1946, 1947 ஆம் ஆண்டுகளில் மின்னொளி என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1948 தொடக்கம் வத்துகாமம் கிறித்தவத் தேவாலய தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். பூங்குயில், தமிழ்ச்செல்வி, பார்வதி, காதற் பறவைகள் முதலிய சிறு காவியங்களை எழுதியுள்ளார். ஏராளமான பாலர் பாடல்களை எழுதிப் புகழ் படைத்தவர்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. கலைச்செல்வி (இதழ்), ஏப்ரல் 1959, பக். 2.