முரண்பாடான உடையவிழ்ப்பு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அதிக குளிரால் மரணமடைவோரில் ஐந்தில் ஒருவர் முரண்பாடான உடையவிழ்ப்பு (paradoxical undressing) என்ற நிலை ஏற்பட்டு தன் ஆடைகளைக் அவிழ்த்துக் கொள்வார்.
பெயர்க்காரணம்
[தொகு]பொதுவாக குளிரால் வாடும் ஒருவர் கம்பளி போன்ற உடைகளை அணிவார். கம்பளி போன்றவை இல்லாத பட்சத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அதிக ஆடைகளை அணிவார். ஆனால் இந்நிலையிலோ குளிரால் வாடுபவர் உடைகளை அவிழ்த்துக் கொள்வார். இது முரண்பாடான ஒன்றாதலால் இந்நிலை முரண்பாடான உடையவிழ்ப்பு எனப் பெயர் பெற்றது.
இந்நிலை ஏற்படக் காரணம்
[தொகு]இரண்டு காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவை,
- நம் உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருப்பது மூளையின் ஒரு பகுதியான ஐப்போதலாமசு (Hypothalamus) ஆகும். அதிகக் குளிரினால் இது பாதிக்கப்பட்டு முரண்பாடாகச் செயல்படலாம்.
- குளிரில் நமது தசைகள் சுருக்கமடைந்து வெப்பத்தை உற்பத்தி செய்யும். தசைகள் சுருங்குவதோடு இரத்தக் குழாய்களும் சுருக்கமடைந்திருக்கும். நேரமாக ஆக தாக்குப்பிடிக்க முடியாத தசைகள் விரிவடையும். இரத்தக் குழாய்களும் விரிவடையும். உடனே உள் உடல் வெப்பம் முழுவதும் சமநிலை ஏற்படும் வரை தோலுக்குக் கடத்தப்படும். வியர்வையும் உண்டாகும். எனவே பாதிக்கப்பட்டவர் தன் உடைகளைக் களைந்து கொள்வார்.
சட்டஞ் சார் முக்கியத்துவம்
[தொகு]இந்நிலை அதிக சட்டஞ்சார் (legal) மதிப்புடையது. ஏனெனில் இது பார்க்க கற்பழிப்பு மரணத்தை ஒத்திருக்கும்.