முரசு. நெடுமாறன்
முரசு. நெடுமாறன் (பிறப்பு: சனவரி 14 1937) மலேசியாவிலுள்ள தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரும், பல்கலைக் கழக பகுதிநேர விரிவுரையாளருமாவார். தமிழ் நெறி மன்றத்தின் நிறுவுநராகவும் உள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
[தொகு]1950 தொடக்கம் முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவர் கவிதைகள், குழந்தைக் கவிதைகள் போன்றவற்றையே அதிகம் எழுதி வருகின்றார். இவை இரண்டும் பற்றிய ஆராய்ச்சி எனும் கருப்பொருள்களிலேயே இவரது பெரும்பாலான எழுத்துப் படைப்புகள் காணப்படுகினறன. இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் பெருமுயற்சியுடன் மலேசியத் தமிழ்க் கவிதைகளைத் திரட்டி ஓர் ஆய்வுக் கட்டுரையுடனும் விளக்கக் குறிப்புகளுடனும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாகப் பதிப்பித்துள்ளார்.
நூல்கள்
[தொகு]- "மலேசியக் கவிதைக் களஞ்சியம்" (மலேசியக் கவிதைகளின் தொகுப்பு நூல், 1998)
- குழந்தைப் பாடல்கள், கவிதைகள், நாடகங்கள் அடங்கிய 20க்கும் மேலான நூல்கள் & "பாடிப்பழகுவோம்" (குழந்தைப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு - 2003).
பணிகள்
[தொகு]வகுப்பறைகள், மேடைகள் மட்டுமல்லாது வானொலியில் கல்வி ஒலிபரப்பில் இவரது பாடல்கள் பரவலாக இடம் பெற்றுள்ளன. இவற்றை ஒலிப்பேழைகளில் பதிவு செய்தும் பரப்பி வருகிறார். இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பல ஆண்டுகளாக இலவசமாகத் தமிழ்ப் பாடம் போதித்து வந்துள்ளார். ஆண்டுதோறும் மாணவர்களைக் கொண்டு மாணவர் பண்பாட்டு விழாக்கள் நடத்தியுள்ளார்.
கல்விசார் விருதுகள்
[தொகு]- "தமிழ்மணி" பட்டம்
- இலக்கிய இளங்கலை பட்டம்
- முதுகலை பட்டம்
- முனைவர் பட்டம்
பிற விருதுகள்
[தொகு]- அரசாங்கம் PPN விருது வழங்கியுள்ளது (1978)
- தங்கப் பதக்கம் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1986)
- டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் விருது "மலேசியக் கவிதைக் களஞ்சியம்" நூலுக்காக (1998)
- "பாவேந்தர்" விருது - தமிழக அரசு (1998)
- கவிதை விருது கவிதை எண்டர்பிரைஸ் (2000)
- "தமிழவேள்" விருது - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் (2001)
- "முத்தமிழ் அரசு" விருது - உலகத் தமிழாசிரியர் பேரவை (2002)
உசாத்துணை
[தொகு]- தமிழ் எழுத்துலகம் தளத்தில் முரசு. நெடுமாறன் பக்கம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்