முயல் வளர்ப்பு

தமிழ்நாட்டில் வளர்ப்புக் கோழிகள், வான்கோழிகள் போன்று இறைச்சிக்கான முயல் வளர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த வளர்ப்பு முயல்கள் அசைவ உணவகங்களில் ஒரு உணவாக தற்போது பயணில் உள்ளது. இந்தத் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.[1][2][3]
வளர்ப்பு முறை
முயல் வளர்ப்பின் பொழுது ஒரு வருடத்திற்கு ஆறு முறை குட்டி ஈனும்(போடும்). ஒவ்வொரு முறையும் 5 முதல் 8 வரை குட்டி ஈனும் (போடும்). குட்டி ஈன்று(போட்டு) 6 வாரம் வரை குட்டிகளை தாய் முயலிடம் இருந்து பிரிக்க கூடாது. ஈன்ற குட்டிகளை ஆறு மாதம் வரை ஒன்றாக வளர்க்கலாம்.ஆறு மாதம் தொட்டதும் ஆண் முயல்களை ஒன்றாக வளர்க்க கூடாது . ஒன்றாக வளர்க்கும் பொழுது அவைகள் ஒன்றை ஒன்று கடித்து கொள்ளும்.மேலும் கருவுகற்ற முயலைகளை தனித்தனியாக பிரித்திடல் அவசியம்.இல்லா விடில் ஆண் முயல் கருவுற்ற பெண் முயலை உடலுறவுக்கு அனுகும் அப்போது பெண் முயல் ஆண் முயலின் ஆண் குறி விறை அவைகளை கடித்து விடும்.கருவுற்ற பெண் முயலும் பெண் முயலும் கடித்துக்கொள்ள வாய்ப்பு உண்டு. 2 அல்லது 3 பெண் முயலுக்கு ஒரு ஆண் முயல் போதுமானது.பெண் முயல்களை விட குறைந்தது ஒரு மாதம் ஆண் முயல் மூப்புடையதாக இருப்பது அவசியம்.
கூண்டு அமைத்தல்
2 அடி உயரம் 2 அடி அகலம் 2 அடி நீளம் அளவுகளில் ஒரு அங்குள அளவு இடைவெளி உள்ள கால் அரை அங்குள அளவு (3.15mm)திடம் உள்ள கம்பியில் வலை அமைத்து அதில் நான்கு கால்களை(தூண்கள்) பொருத்துதல் ஒரு முயலுக்கு போதுமானது. குட்டிகளை தாயிடமிருந்து பிரித்த பிறகு கால் ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்அங்குள இடைவெளி உள்ள கம்பியில் கூண்டமைத்தல் குட்டிகளின் கால் கூண்டின் வலையில் சிக்காமல் இருக்க உதவும். தரையியில் முயல் வளர்க்க விரும்பினால் சுற்று சுவர் அல்லது கட்டிடத்தின் அடித்தளம் குறைந்தது நான்கடி ஆழம் இருத்தல் அவசியம். இல்லாது இருந்தால் முயல் குழி தோன்டி பொந்து அமைத்து சுவருக்கு மறு பக்கம் சென்றுவிடும்.
பராமரிப்பு
தினமும் இரண்டு வேலை கூண்டில் உள்ள தீவத்னதை எடுத்துவிட்டு அப்பாத்திரத்தை கழுவி மீண்டும் கூண்டுக்குள் வைத்து தீவனம் அல்லது பச்சை வகை உணவு வழங்கனும். அதோடு கூண்டின் கீழ் விழும் முயல் புலுக்கைகளை கூட்டி அள்ளி எடுத்து அப்புற படுத்தி தினமும் ஒரு முறை நீர் விட்டு கழுவி விடனும்.இல்லா விடில் எறும்புகள் உருவாகி முயல் குட்டிகளை கடித்து கொண்டு விடும். குட்டிகள் இரண்டு மாதங்கள் முடிந்து கறிக்கு விற்களாம்.வளர்க்க வாங்க வருபவர்களுக்கு குட்டியை தாயிடம் இருந்து பிரித்ததும் விற்களாம்.
நோய்களை தவிர்க்க நாட்டு மருந்துகள் விலை மலிவு. உடனடி தீர்விற்கு ஆங்கில மருந்துகள் பலனளிக்கும்.நடப்பில் சிறந்த நுண்ணிய வைத்தியர் கிடைக்காததால் நாம் ஆங்கில மருத்துவத்தை நாடவேண்டி உள்ளது.
இயற்கைவிவசாயம் செய்பவர்கள் முயல் வளர்ப்பையும் செய்யலாம்,சிறந்த வருவாய்க்கு இது வழிவகுக்கும்.
செல்ல பிராணியாகவும் தற்சமயம் முயல் வளர்க்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புகள்
[தொகு]- World Rabbit Science Association
- Russian Branch of the World Rabbit Science Association
- Belarusian Rabbit Breeders Public Association பரணிடப்பட்டது 2019-09-04 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anthon, Charles (1850). A System of Ancient and Mediæval Geography, for the Use of Schools and Colleges. New York: Harper & Brothers. Retrieved 21 February 2018.
- ↑ Whitman, Bob D. (October 2004). Domestic Rabbits & Their Histories: Breeds of the World. Leawood KS: Leathers Publishing. ISBN 978-1585972753.
- ↑ Dunlop, Robert H.; Williams, David J. (1996). Veterinary Medicine: An Illustrated History. St Louis, MO: Mosby. ISBN 0-8016-3209-9.