முப்புரோப்பைலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்புரோப்பைலீன்
இனங்காட்டிகள்
13987-01-4 Y
7379-69-3
ChemSpider 10618997
InChI
  • InChI=1S/C9H18/c1-5-6-9(4)7-8(2)3/h5,8-9H,1,6-7H2,2-4H3
    Key: FSWNZCWHTXTQBY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13437467
SMILES
  • CC(C)CC(C)CC=C
பண்புகள்
C9H18
வாய்ப்பாட்டு எடை 126.24
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.022
உருகுநிலை -93.5
கொதிநிலை 156
மிகக் குறைவு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

முப்புரோப்பைலீன் (Tripropylene) என்பது C9H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக நோனீன் சேர்மத்தின் கட்டமைப்பு மாற்றியங்களின் கலவையாகவே இது விற்கப்படுகிறது.[1] புரோப்பிலீனின் சில்படிமமாதல் வினையின் மூலம் இச்சேர்மம் உருவாகிறது.

C3H6 → C9H18

இந்தச் செயல்பாட்டில், இரண்டு இரட்டைப் பிணைப்புகள் இழக்கப்பட்டு, படத்தில் காட்டப்பட்டுள்ள மாற்றியத்தால் விளக்கப்பட்டுள்ளபடி ஓர் இரட்டைப் பிணைப்பு தக்கவைக்கப்படுகிறது. பாலிபாசுபாரிக்கு அமிலம் போன்ற அமிலங்களால் இவ்வினை வினையூக்கப்படுகிறது.[2] பல்வேறு வினையூக்கிகள் இதற்காக ஆராயப்பட்டுள்ளன.[3] வினையானது ஒரு கார்பன் நேர்மின் அயனி ((CH3)2CH+) உருவாவதன் மூலம் தொடர்கிறது. இவ்வயனி மற்றொரு புரோப்பிலீன் அலகு மீது தாக்குதல் நடத்துகிறது. ஒரு புதிய கார்பன் நேர்மின் அயனி உருவாக்குகிறது.

மற்ற ஆல்க்கீன்களைப் போலவே, புரோப்பிலீன் முப்படியும் ஆல்கைலேற்ரும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. அரோமாட்டிக்கு அடி மூலக்கூறுகளின் ஆல்கைலேற்றம் மூலம் பல வளர்ச்சியூக்கிகளும் உயவுப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tripropylene MSDS, chemexper.net
  2. G. R. Lappin, L. H. Nemec, J. D. Sauer, J. D. Wagner "Olefins, Higher" in Kirk-Othmer Encyclopedia of Chemical Technology, 2010. எஆசு:10.1002/0471238961.1512050612011616.a01.pub2
  3. Johan A. Martens, Wim H. Verrelst, Georges M. Mathys, Stephen H. Brown, Pierre A. Jacobs "Tailored Catalytic Propene Trimerization over Acidic Zeolites with Tubular Pores" Angewandte Chemie International Edition Angewandte Chemie International Edition 2005, Volume 44, Issue 35, pages 5687–5690. எஆசு:10.1002/anie.200463045
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்புரோப்பைலீன்&oldid=3781729" இலிருந்து மீள்விக்கப்பட்டது