முன்னோடிச் சேர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னோடிச் சேர்மம் (precursor (Chemistry)) என்பது எந்தவொரு சேர்மம் வேதிவினையில் பங்கேற்று மற்றொரு சேர்மத்தை கொடுக்கிறதோ அந்த சேர்மத்தைக் குறிக்கும்.

உயிர் வேதியியலில் முன்னோடி என்ற சொல் பெரும்பாலும் வளர்சிதை மாற்றப் பாதையில் தோன்றும் மற்றொரு சேர்மத்திற்கு முந்தைய ஒரு வேதியியல் சேர்மத்தை குறிக்கிறது. புரத முன்னோடி என்ற பயன்பாட்டிலுள்ள சொற்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

சட்டவிரோத மருந்து முன்னோடிகள்[தொகு]

1988 ஆம் ஆண்டில், போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்களின் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாடு 1988 ஆம் ஆண்டு நடைபெற்றது. சட்டவிரோதமான மருந்துகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் முன்னோடி சேர்மங்களின் கட்டுப்பாடு தொடர்பான விரிவான விதிகள் மற்றும் தேவைகளை இம்மாநாடு அறிமுகப்படுத்தியது. ஐரோப்பாவில் ஒழுங்குமுறைச் சட்டம் 273/2004 என்ற எண்ணில் முன்னோடி மருந்துகள் குறித்த சட்டத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் நாள் ஏற்றுக் கொண்டது.

சட்டவிரோத வெடிபொருள் முன்னோடிகள்[தொகு]

ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறைச் சட்டம் 98/2013 என்ற எண்ணில் முன்னோடி வெடிபொருட்கலை சந்தைப்படுத்துவது மற்றும் பயன்படுத்துவது குறித்த சட்டத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் 2013 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 அன்று ஏற்றுக்கொண்டுள்ளது. வெடிபொருட்களை சட்டவிரோதமாக தயாரிப்பதற்கு தவறாகப் பயன்படுத்தக்கூடிய சில பொருட்கள் அல்லது கலவைகளை அறிமுகம் செய்தல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான விதிமுறைகளை பின்பற்றுவதில் ஐரோப்பா முழுவதும் ஒன்றுபட்டு செயல்படுவதை இச்சட்டம் அங்கீகரிக்கிறது[1].

கண்டறிதல்[தொகு]

சிலிக்கான்-நுண்ணளவு வாயு நிறமாலை நெடுவரிசையுடன் பொருந்திய வெற்று இழை பொருத்தப்பட்ட அகச்சிவப்பு நிறமாலை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கையடக்கமான மேம்பட்ட உணரி மூலம் சட்டவிரோத தூண்டுதல்களையும் நுண்ணளவு நிலை முன்னோடிகளையும் உணர்திறன் மூலம் பகுப்பாய்வு செய்யலாம்[2].

வெடிபொருட்களையும் அவற்றின் முன்னோடிகளையும் கண்டறிய ராமன் நிறமாலையியல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது[3]. சுற்றுச்சூழலில் வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத மருந்துகள் போன்ற முன்னோடி சேர்மங்களைக் கண்டறியக்கூடிய தொழில்நுட்பங்கள் வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் தளங்களை விரைவாக கண்டறிவதற்கு பங்களிக்கக்கூடும்[4][5][6].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2017-09-13. பார்க்கப்பட்ட நாள் 2017-09-13.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. S. Mengali, D. Luciani, R. Viola, N. Liberatore, S. Zampolli, I. Elmi, G. Cardinali, A. Poggi, E. Dalcanale, E. Biavardi, P. Esseiva, O. Delemont, F. Bonadio, and F.S. Romolo, Toward street detection of amphetamines பரணிடப்பட்டது 2017-08-19 at the வந்தவழி இயந்திரம். SPIE Newsroom (2013).
  3. Trace detection of explosives and their precursors by surface enhanced Raman spectroscopy. S. Almaviva, S. Botti, L. Cantarini, A. Palucci, A. Puiu, A. Rufoloni, L. Landstrom, F.S. Romolo. Proceedings of SPIE - The International Society for Optical Engineering, Article number 854602, Optics and Photonics for Counterterrorism, Crime Fighting, and Defence VIII; Edinburgh; United Kingdom (2012) Code 96354.
  4. Cloé Desmet, Agnes Degiuli, Carlotta Ferrari, Francesco Saverio Romolo, Loïc Blum and Christophe Marquette, Electrochemical Sensor for Explosives Precursors’ Detection in Water. "Archived copy". Archived from the original on 2017-09-13. பார்க்கப்பட்ட நாள் 2017-09-13.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Challenges 8(1), 10; doi:10.3390/challe8010010 (2017).
  5. Carlotta Ferrari, Alessandro Ulrici and Francesco Saverio Romolo, Expert System for Bomb Factory Detection by Networks of Advance Sensors. "Archived copy". Archived from the original on 2017-09-13. பார்க்கப்பட்ட நாள் 2017-09-13.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Challenges 8(1), 10; doi:10.3390/challe8010001 (2017).
  6. Francesco Saverio Romolo, Samantha Connell, Carlotta Ferrari, Guillaume Suarez, Jean Jacques Sauvain, Nancy Hopf. Locating bomb factories by detecting hydrogen peroxide. Talanta, Volume 160 15-20 doi: 10.1016/j.talanta.2016.06.033. (2016).
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னோடிச்_சேர்மம்&oldid=2940475" இலிருந்து மீள்விக்கப்பட்டது