முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி50

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி50 என்பது (PSLV-C50) இந்திய முனைய துணைக்கோள் ஏவுகல வரிசையில் 52-ஆவது ஏவுதல் ஆகும். இதன் மூலம் இந்திய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-01(CMS-01) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் ஆந்திரப்பிரதேசம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று இந்திய சீர் நேரம் 3.41 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.இந்த ஏவுகலம் சுமார் 44.4 மீ உயரம் கொண்டதாகும். [1]

செயற்கைக்கோள் ஏவுதல்[தொகு]

இந்த ஏவுகலம் இந்திய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-01 (சிஎம்எஸ்-01) ஐ புவிவட்டப்பாதையில் செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது. சற்றேறக்குறைய 20 நிமிடங்கள் 12 விநாடிகளுக்குப் பிறகு செயற்கைக்கோளினை உத்தேசிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்தியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PSLV-C50/CMS-01 - ISRO". www.isro.gov.in. Archived from the original on 2020-12-11. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  2. "PSLV-C50 successfully launches CMS-01 from Sriharikota - ISRO". www.isro.gov.in. Archived from the original on 2020-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-12-27.