முத்தேவியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து மதத்தின் மும்மூர்த்திகளாக பிரம்மா, திருமால், சிவன் ஆகியோரின் மனைவிகளான சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி ஆகியோர் முத்தேவியர் என்று வணங்கப்படுகிறார்கள். இவர்களை கலைமகள், அலைமகள், மலைமகள் என்றும் கூறுவதுண்டு. சாக்தத்தில் அனைத்து சக்திகளும் ஆதிசக்தியின் வடிவம் என்பதால் இவர்கள் மூவரும் ஆதிசக்தியின் வடிவங்களாக வணங்கப்படுகிறார்கள்.


கோயில்களில்

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலில் ஒரே சன்னதியில் பார்வதி (கிரிகுஜாம்பிகை), லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றார்கள். [1]

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. http://temple.dinamalar.com/New.php?id=918

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தேவியர்&oldid=1495116" இலிருந்து மீள்விக்கப்பட்டது