முத்துராஜா (நடிகர்)

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

முத்துராஜா (இறப்பு: பெப்ரவரி 21, 2012, அகவை 34) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். கிழக்கு கடற்கரை சாலை, வெளுத்துக்கட்டு, வேங்கை, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை உள்பட 55 படங்களில் நடித்துள்ளார். சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற "வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" என்ற பாடலில் நடித்த பிறகு இவருக்கு பல வாய்ப்புகள் வந்தன. "வாளமீனு முத்துராஜா" என்ற அடைமொழியுடன் இவர் நடித்து வந்தார்.

கம்பத்தைச் சேர்ந்த முத்துராஜா, இயக்குநர் பாரதிராஜா அலுவலகத்தில் பணியாளராகவும், நடிகர் கவுண்டமணியிடம் சில ஆண்டுகள் உதவியாளராகவும் இருந்தவர். தனது வீட்டில் நடந்த விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயத்துக்குள்ளாகி இறந்தார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார்.

வெளி இணைப்புகள்[edit]