முதலைவாய் பற்றுவாய்
Jump to navigation
Jump to search
மின்சுற்றுக்களில் இரு உறுப்பக்களை கம்பிகள் ஊடாக இணைக்க பயன்படும் ஒரு மின்கூறுப் பொருளே முதலைவாய் பற்றுவாய் (alligator or crocodile clip) ஆகும். விரைவாக மின்சுற்று உறுப்புகள் ஊடாக இணைப்புகளை ஏற்படுத்த முதலைவாய் பற்றுவாய்கள் உதவுகின்றன. இவை பெரும்பாலும் தற்காலிகமாக, எடுத்துக்காட்டாக பரிசோதனைக் கூடத்தில் சுற்றை இணைக்கவே பயன்படுத்தப்படுகின்றன.
"இதில் சுருள் வில்லும், கவ்வி இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள கூர்ப்பான பற்களும் இருப்பதால் இது சாத்தியமாகின்றது. இது விலங்கினத்திலிருந்து பிறந்த ஒரு கலைச்சொல்."[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ மெ. மெய்யப்பன். (2005). நிறம் மாறும் சொற்கள். சென்னை: வானதி பதிப்பகம். பக்கம் 9.