முதலாம் உலகப் போரில் இந்திய இராணுவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய இராணுவம்
சொம்மே யுத்தத்தில் இந்திய சைக்கிள் துருப்புக்கள்
செயற் காலம்1895–1947
நாடு இந்தியா
பற்றிணைப்பு பிரித்தானியா
வகைதரைப்படை
அளவு17,80,000
சண்டைகள்இரண்டாம் பூவர் போர்
திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பு
முதலாம் உலகப் போர்
வசிரிசுதான் படையெடுப்பு (1919–20)
வசிரிசுதான் படையெடுப்பு (1936–39)
இரண்டாம் உலகப் போர்
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
எர்பெர்ட் கிச்னர், முதலாம் இயர்ல் கிச்னர்

முதலாம் உலகப்போரில் இந்திய இராணுவமானது பிரித்தானியப் பேரரசின் ஒரு பகுதியாக பங்கெடுத்தது. இது பிரித்தானிய இந்திய இராணுவம் என்றும் அழைக்கப்பட்டது. நாடு கடந்து 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய துருப்புக்கள் சேவையாற்றின. இதில் 62,000 பேர் இறந்தனர். மேலும் 67,000 பேர் காயமடைந்தனர். மொத்தமாக குறைந்தது போரின்போது 74,187 இந்திய போர்வீரர்கள் இறந்தனர்.[சான்று தேவை]

முதலாம் உலகப் போரில் இந்திய இராணுவமானது செருமானியப் பேரரசுக்கு எதிராக மேற்குப் போர்முனையில் சண்டையிட்டது. முதலாம் இப்ரேசு யுத்தத்தில் குதாதத் கான் விக்டோரியா சிலுவை வழங்கப்பட்ட முதல் இந்தியராக உருவானார். இந்திய பிரிவுகள் எகிப்து, கலிப்பொலி, செருமானிய கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன. உதுமானியப் பேரரசுக்கு எதிராக மெசபத்தோமியாவில் கிட்டத்தட்ட 7 இலட்சம் இந்தியப் போர் வீரர்கள் சேவையாற்றினர்.[1] சில பிரிவுகள் நாடு கடந்து அனுப்பப்பட்ட அதே நேரத்தில், பிறர் இந்தியாவிலேயே வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை பாதுகாப்பதற்காகவும், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பயிற்சி பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.[சான்று தேவை]

1942ஆம் ஆண்டு முதல் இந்திய இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த சர் கிளௌட் அச்சின்லெக் பிரித்தானியர்கள் "முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகிய இரண்டையுமே இந்திய இராணுவம் இல்லாவிட்டால் கடந்திருக்க இயலாது" என்று உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.[2][3]

உசாத்துணை[தொகு]

  1. Participants from the Indian subcontinent in the First World War. Memorial Gates Trust. http://www.mgtrust.org/ind1.htm. பார்த்த நாள்: 12 September 2009. 
  2. "The Indian Army in the Second World War". Commonwealth War Graves Commission. Archived from the original on April 4, 2012.
  3. "Armed and ready". Archived from the original on 24 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2015.