முதலக்கம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத்தின் தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் வைகை அணை உள்ளது.

வரலாறு[தொகு]

பண்டைய காலத்தில் முதலக்கம்பட்டியில் கள்ளிச்செடிகளும், மரங்களும் அடர்;ந்து காணப்பட்ட பகுதியாகும். அப்போது முயல் வேட்டைக்குச் சென்ற காமு என்பவர் அந்தப்பகுதியில் புலியை கண்டார். உடனே அந்த புலியை கொன்று அந்தப்பகுதியில் குடியேறினார். (புலிக்கு தெலுங்கில் முதவா என்று பெயர்) அந்தப் பகுதியை சுத்தம் செய்து அங்கேயே காமு என்பவரும் அவருடைய உறவினர்களும் குடியேறி உள்ளார்கள். புலியைக் கொன்றதால் காமு நாயக்கரை முதவா காமு நாயக்கர் என்று அழைத்தனர். முதவா காமு நாயக்கருக்கு பெண் கொடுத்தவர் பெண்ணுக்கு துணைக்கு அனுப்ப ஆள் இல்லாததால் ஊர்காவலன் என்னும் காவல்தெய்வத்தை பெண்ணுக்கு காவலாக அனுப்பி வைத்துள்ளார். மேற்கண்ட காவல்தெய்வமான ஊர்காவலன் அந்தப்பகுதி பெண்களுக்கு ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவது, சிறு குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற வேலைகளை செய்து வந்ததாக செவி வழிச்செய்தி இப்பகுதி மக்களால் நம்பப்பட்டு வருகிறது. தவறு செய்தால் இவர் தண்டனை தருவார் என்று நம்புகின்றனர். [1] [2]

சான்றுகள்[தொகு]

  1. 1.தேனிமாவட்ட தடயம், அகமது நிஸ்மா பப்ளிகேசன்ஸ், தேவதானப்பட்டி
  2. 2.மாலைமலர்-19.7.2013-பக்கம்-3, திண்டுக்கல் பதிப்பு தேனி மாவட்டம்,
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலக்கம்பட்டி&oldid=1530213" இருந்து மீள்விக்கப்பட்டது