முகமது பகத்து இரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகத்து இரகுமான்
Fahad Rahman
முழுப் பெயர்முகமது பகத்து இரகுமான்
நாடுவங்காளதேசம்
பிறப்புசூலை 4, 2003 (2003-07-04) (அகவை 20)
பரித்துபூர், வங்காளதேசம்
பட்டம்பன்னாட்டு மாசுட்டர் (2019)
பிடே தரவுகோள்2409 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2428 (சூலை 2023)

முகமது பகத்து இரகுமான் (Mohammad Fahad Rahman) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2003 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டில் பிடே அமைப்பு பகத்து இரகுமானுக்கு பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டத்தை வழங்கியது.[1][2]

சதுரங்க வாழ்க்கை[தொகு]

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்கு முகமது பகத்து இரகுமான் தகுதி பெற்றார். அங்கு இவர் முதல் சுற்றில் இரண்டாம் நிலை வீரரான அனிசு கிரியிடம் தோற்றார்.

உலகக் கோப்பையின் போது முகமது பகத்து இரகுமான் இகோர் ரௌசிசால் பயிற்சியளிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இசுட்ராசுபர்க் திறந்தநிலை சதுரங்கப் போட்டியில் அவர் ஏமாற்றி பிடிபட்டார். இதனால் வங்காளதேச சதுரங்கக் கூட்டமைப்பு ரௌசிசுடனான உறவை முறித்துக் கொண்டது.[3]

2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரத்தில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பையிலும் இவர் விளையாடினார். முதல் சுற்றில் இத்தாலி நட்டைச் சேர்ந்த சதுரங்க வீரர் டேனியல் வோகாடுரோவிடம் இவர் மோதினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fahad, Shirin become IM, WIM". The Daily Star. 24 March 2019. https://www.thedailystar.net/sports/chess/news/fahad-shirin-become-im-wim-1719412. "Fahad Rahman earned the title of International Master" 
  2. "Mohammad Fahad, Rahman". FIDE. பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
  3. "Bangladesh chess coach Rausis accused of cheating". Dhaka Tribune. 2019-07-13. பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_பகத்து_இரகுமான்&oldid=3867230" இலிருந்து மீள்விக்கப்பட்டது