முகமது அசதுல்லா அல்- கலிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஹம்மது அசாதுல்லா அல்-காலிப் (Muhammad Asadullah Al-Ghalib அரபு :. اسد الله; வங்காள மொழி: ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব  ; பிறப்பு 15 ஜனவரி 1948) ஒரு வங்காளதேச சீர்திருத்தவாத இஸ்லாமிய அறிஞர் மற்றும் ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்தில் அரபு மொழி முன்னாள் பேராசிரியராகப் பனியாற்றியவர் ஆவார். இவர் ஒரு பியூரிட்டன் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் ஆவார்.[1][2] இவர் ஒரு இஸ்லாமிய ஆராய்ச்சி இதழான மாதாந்திர அட்-தஹ்ரீக்கின் நிறுவனர் ஆவார்.[3]

23 பிப்ரவரி 2005 அன்று, இஸ்லாமிய போராளிகளை வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து வங்காளதேச அரசாங்கம் இவரை கைது செய்தது.[4][5][6] இஸ்லாமிய பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி சங்கத்திலிருந்து இவர் நிதி பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.[7][8] இருப்பினும் அந்த அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை என்று இவர் மறுத்தார் [9][10][11][12] மற்றும் ஆகஸ்ட் 28, 2008 அன்று சிறையில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டார்.[13][14][15] இறுதியாக, இவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.[16][17]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இவர் வங்காளதேசத்தின் சத்கிரா மாவட்டத்தில் அமைந்துள்ள புலாரதி என்ற கிராமத்தில் 1948 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை அஹ்மத் அலி (கி.பி 1883-1976) ஒரு இஸ்லாமிய அறிஞர் மற்றும் அஹ்லேஹதீத்தின் தலைவர்.

இவர் வங்காளதேசத்தின் சத்கிரா, கக்டங்கா சீனியர் மெட்ராஷாவில் தகில், ஆலிம் மற்றும் பாசில் ஆகிய பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். 1969 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தின் ஜமல்பூரில் உள்ள அராம்நகர் ஆலியா மதரஸாவில்காமில் (முஹாதித்) தேர்வில் தேர்ச்சி பெற்றார். முதல் பிரிவில் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றார். கிழக்கு பாகிஸ்தானின் அப்போதைய மதராஷா கல்வி வாரியத்தில் 16 வது இடத்தையும், கமில் தேர்வில் 5 வது இடத்தையும் பெற்றார்.

கலரோவா அரசுக் கல்லூரியில் ஐ.ஏ. தேர்ச்சி பெற்றார். வங்காளதேசத்தின் குல்னாவின் மஜீத் மெமோரியல் சிட்டி கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தினையும் மற்றும் 1976 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தில் அரபு துறையில் முதுகலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக இவர் 1992 ஆம் ஆண்டில் ராஜ்ஹசி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

டாக்காவின் வடக்கு ஜத்ராபரியில் உள்ள ஜாமியா முஹம்ம்தியா அரேபியா மெட்ராஷாவில் இவர் ஆசிரியராக பணியாற்றினார். முதுகலைப் பிரிவில் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் இவர் டாக்கா பல்கலைக்கழகத்தில் உள்ள நவீன மொழிகள் நிறுவனத்தில் பகுதி நேர விரிவுரையாளராக 25 செப்டம்பர் 1980 இல் சேர்ந்தார்.

அதே ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி, ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் பிரிவில் விரிவுரையாளராக சேர்ந்தார். 1995 ஆம் ஆண்டில் தனியாக துறை பிரிக்கப்பட்டது. 2016 இல் பேராசிரியராக ஓய்வு பெறும் வரை இவர் அரபுத் துறையில் இருந்தார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல்வேறு நாடுகளில் சிறப்பு பேச்சாளராக பல சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டார்.[1]

பார்வைகள்[தொகு]

2005 ஆம் ஆண்டில், தலைமை மதகுரு உபைதுல் ஹக் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களில் இவரும் இணைந்து , தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளைக் கண்டித்து ராஜ்ஷாஹியில் ஒரு பெரிய போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.[18]

சிறை[தொகு]

23 பிப்ரவரி 2005 அன்று, இஸ்லாமிய போராளிகளை வழிநடத்தியடதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து வங்காளதேச அரசாங்கம் இவரை கைது செய்தது.[4][5][6] இஸ்லாமிய பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி சங்கத்திலிருந்து இவர் நிதி பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.[7][8] இருப்பினும் அந்த அமைப்புடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று இவர் மறுத்தார்

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 Ahlehadeeth Andalon Bangladesh (AHAB)
 2. আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ. Ahlehadeethbd.org (in Bengali). Archived from the original on 2016-02-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-02.
 3. মাসিক আত-তাহরীক - জানুয়ারী ২০১৬. At-tahreek.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2016-02-02.
 4. 4.0 4.1 . http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4290407.stm. 
 5. 5.0 5.1 . http://www.upi.com/Bangladeshi-professor-arrested-as-militant/46861109235113/. 
 6. 6.0 6.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-09-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180915191000/http://www.atimes.com/atimes/South_Asia/GC02Df03.html. 
 7. 7.0 7.1 . http://www.csmonitor.com/2005/0907/p06s01-wosc.html. 
 8. 8.0 8.1 . http://bangladesh-web.com/view.php?hidRecord=35492. 
 9. . http://www.upi.com/Top_News/2005/03/01/Bangladesh-brings-15-Islamists-to-court/UPI-73811109667527/?st_rec=74731091030023. 
 10. . https://wikileaks.org/plusd/cables/06DHAKA867_a.html. பார்த்த நாள்: 2016-02-02. 
 11. . https://wikileaks.org/plusd/cables/05DHAKA914_a.html. பார்த்த நாள்: 2016-02-02. 
 12. . http://www.theindependentbd.com/printversion/details/55805. 
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-04-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160423093333/http://print.thefinancialexpress-bd.com/old/2008/08/30/44095.html. 
 14. . http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=52340. 
 15. . http://bdnews24.com/bangladesh/2008/08/29/alleged-militant-kingpin-ghalib-out-on-bail. 
 16. . http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=43073. 
 17. . http://www.thedailystar.net/2005/02/17/d5021701033.htm. 
 18. "Thousands raise hands to almighty during jumma to get rid of suicide bombings". bdnews24.com. 8 December 2005. http://bdnews24.com/politics/2005/12/08/thousands-raise-hands-to-almighty-during-jumma-to-get-rid-of-suicide-bombings. பார்த்த நாள்: 28 January 2016.