மீளாக்க வேளாண்மை
மீளாக்க வேளாண்மை (Regenerative agriculture) என்பது உணவும் வேளாண் அமைப்புகளுக்கான பாதுகாப்பும் மறுவாழ்வும் தரும் அணுகுமுறையாகும். இது மேற்பரப்பு மண் மீளுருவாக்கம் , பல்லுயிர் பெருக்கம் , ,[1]நீர் சுழற்சியை மேம்படுத்துதல் , [2] சுற்றுச்சூழல் சேவைகளை மேம்படுத்துதல் , உயிரியல் செய்முறையை ஏற்பது, [3] வேளாண்மையில் காலநிலை மாற்றத்தைச் சந்தித்தல், பண்ணை மண்ணின் வளத்தையும் உயிர்ப்பு ஆற்றலையும் வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
மீளாக்க வேளாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட நடைமுறை அல்ல. மாறாக , மீளாக்க வேளாண்மையை ஏற்பவர்கள் பல்வேறு பேணுந்தகவு வேளாண்மை நுட்பங்களை இணைத்து பயன்படுத்துகின்றனர். .[4] நடைமுறைகளில் பண்ணைக் கழிவுகளை முடிந்தவரை மறுசுழற்சி செய்தல், பண்ணைக்கு வெளியே உள்ள வாயில்களிலிருந்து உரம் ஆக்கப் பொருட்களைச் சேர்ப்பது ஆகியவை அடங்கும். .[5][6][7][8] சிறு பண்ணைகள், தோட்டங்களில் மீளாக்க வேளாண்மை பெரும்பாலும் பெர்மாகல்ச்சர், வேளாண்சூழலியல், வேளாண்காடுகள், மீளாக்கச் சூழலியல், சாரநிலை வடிவமைப்பு, முழுமையான மேலாண்மை போன்ற நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிய பண்ணைகளும் இத்தகைய நுட்பங்களைப் பேரளவில் பின்பற்றி வருகின்றன. மேலும் பெரும்பாலும் "உழவிலாத மற்றும் / அல்லது " குறை உழவு நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றன.
மண்ணின் வளம் மேம்படுவதால் , உள்ளிடல் தேவைகள் குறையக்கூடும்; மேலும் பயிர் விளைச்சல் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் மண் கடும் வானிலைக்கு எதிராக அதிக நெகிழ்திறனையும் குறைவான பூச்சிகள் தாக்கத்தையும் நோய்த்தொற்றுகளையும் கொண்டுள்ளது. .[9]
மீளாக்க வேளாண்மை கரிம ஈராக்சைடை அகற்றுவதால் காலநிலை மாற்றத்தைத் தணிக்கிறது. அதாவது இது வளிமண்டலத்திலிருந்து கரிமத்தை இழுத்துப் பிரிக்கிறது. கரிம உமிழ்வைக் குறைப்பதோடு கரிமப் பிரித்தெடுத்தல் நடைமுறைகளும் வேளாண்மையில் பரவலடைந்து வருகின்றன.
வரலாறு
[தொகு]தோற்றம்
[தொகு]மீளாக்க வேளாண்மை என்பது பல்வேறு வெளாண்மை, சுற்றுச்சூழல் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது , இதில் குறிப்பாக சிறும மண் இடையூறு, உரம் தொகுப்பு நடைமுறைக்கு முதன்மை அளிக்கப்படுகிறது. .[10] மேனார்டு முர்ரே கடல் கனிமங்களைப் பயன்படுத்துவது போன்ற ஒத்த எண்னக்கருக்களைக் கொண்டிருந்தார். .[11][12] அவரது பணி வெப்பமண்டலப் பகுதிகளில் உழவு சாராத புதிய நடைமுறைகளுக்குத் திரும்பியது. வெட்டுதலும் தழைக்கூளம் ருவாக்குதைல் போன்ற புதிய நடைமுறைகளுக்கு வழிவகுத்தது. .[13][14][15] தாள் தழைக்கூளம் இடல் என்பது களைகளை மென்மையாக்கி , கீழுள்ள மண்ணில் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் ஒரு மீளுருவாக்க வேளாண்மை நடைமுறையாகும்.[16][17]
உரோடேல் நிறுவனம்1980 களின் முற்பகுதியில் ' மீளுருவாக்கம் வேளாண்மை ' என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியது. .[18] உரோடேல் வெளியீட்டு மீளாக்க வேளாண்மை நூல்வெளியீட்டுக் கழகத்தை உருவாக்கியது. இது 1987 ஆம், 1988 ஆம் ஆண்டுகளில் மீலாக்க வேளாண்மை நூல்களை வெளியிடத் தொடங்கியது.</ref> Rodale Publishing formed the Regenerative Agriculture Association, which began publishing regenerative agriculture books in 1987 and 1988.[19]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Our Sustainable Future - Regenerative Ag Description". csuchico.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.
- ↑ Underground, The Carbon; Initiative, Regenerative Agriculture; CSU (2017-02-24). "What is Regenerative Agriculture?". Regeneration International. பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.
- ↑ Teague, W. R.; Apfelbaum, S.; Lal, R.; Kreuter, U. P.; Rowntree, J.; Davies, C. A.; Conser, R.; Rasmussen, M. et al. (2016-03-01). "The role of ruminants in reducing agriculture's carbon footprint in North America" (in en). Journal of Soil and Water Conservation 71 (2): 156–164. doi:10.2489/jswc.71.2.156. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4561.
- ↑ Schreefel, L.; Schulte, R.P.O.; De Boer, I.J.M.; Schrijver, A. Pas; Van Zanten, H.H.E. (2020-09-01). "Regenerative agriculture – the soil is the base" (in en). Global Food Security 26: 100404. doi:10.1016/j.gfs.2020.100404. பன்னாட்டுத் தர தொடர் எண்:2211-9124.
- ↑ "Regenerative Agriculture". regenerativeagriculturedefinition.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-07.
- ↑ "Regenerative Agriculture". Regenerative Agriculture Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.
- ↑ "Definition — The Carbon Underground : The Carbon Underground". thecarbonunderground.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-07.
- ↑ "Regenerative Organic Agriculture | ORGANIC INDIA". us.organicindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.
- ↑ Moebius-Clune, B. N. (2016). "Comprehensive Assessment of Soil Health – The Cornell Framework (Version 3.2)". Cornell University, Cornell Soil Health Laboratory (Edition 3.2 ed.). பார்க்கப்பட்ட நாள் 2021-04-17.
- ↑ Hensel, Julius (1917). Bread from stones : a new and rational system of land fertilization and physical regeneration. Planet Pub. House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-665-79105-4. இணையக் கணினி நூலக மைய எண் 1083992856. Republished by Acres USA, Austin, Texas, 1991
- ↑ Murray, Maynard. (2003). Sea energy agriculture. Acres U.S.A. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-911311-70-X. இணையக் கணினி நூலக மைய எண் 52379170. (originally published 1976).
- ↑ Phil, Nauta. (2012). Building soils naturally - innovative methods for organic gardeners. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60173-033-6. இணையக் கணினி நூலக மைய எண் 1023314099.
- ↑ Fukuoka, Masanobu. (2010). The one-straw revolution : an introduction to natural farming. New York Review Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59017-392-3. இணையக் கணினி நூலக மைய எண் 681750905. and Fukuoka, Masanobu Metreaud, Frederic P. (1993). The natural way of farming : the theory and practice of green philosophy. Bookventure. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85987-00-2. இணையக் கணினி நூலக மைய எண் 870936183.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Hamaker, John D. (1982). The survival of civilization depends upon our solving three problems--carbon dioxide, investment money, and population : selected papers of John D. Hamaker. Hamaker-Weaver Publishers. இணையக் கணினி நூலக மைய எண் 950891698.
- ↑ Whatley, Booker T. How to Make $100,000 Farming 25 Acres. Emmaus, Pennsylvania, Regenerative Agriculture Association, 1987. 180 pages.
- ↑ Lanza, Patricia. (1998). Lasagna gardening: A new Layering System for bountiful gardens: no digging, no tilling, no weeding, no kidding. Emmaus, PA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87596-795-0. இணையக் கணினி நூலக மைய எண் 733752184.
- ↑ Holzer, Sepp. (2011). Sepp Holzer's permaculture : a practical guide to small-scale, integrative farming and gardening. Chelsea Green Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60358-370-1. இணையக் கணினி நூலக மைய எண் 1120375143.
- ↑ "AFSIC History Timeline". Alternative Farming Systems Information Center, United States National Agricultural Library, USDA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.
- ↑ "Tracing the Evolution of Organic / Sustainable Agriculture (TESA1980) | Alternative Farming Systems Information Center| NAL | USDA" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.
வெளி இணைப்புகள்
[தொகு]- Regenerative Success
- Can more sustainable agricultural practices be utilized
- Learning from Nature
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Kiss the Ground
- "Regenerative Agriculture". Regeneration.org. 2021.
- VicNoTill at Horsham, Victoria. No-Till Regenerative Farming Systems Australia.