மீரா சேத்
மீரா சேத் (Mira Seth) ஒரு இந்திய அரசு குடிமைப்பணி ஊழியர் மற்றும் இராஜதந்திரி ஆவார். இவர் பெண்கள் உரிமை ஆர்வலரும் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.
அவர் சர்வதேச நிலையில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக பல பதவிகளைப் பெற்றார். மேலும் 1990 முதல் 1991 வரையும் 1991 முதல் 1992 வரை தலைவராக இருந்தார். [1] [2] சேத் முன்பு தொழில்துறை மேம்பாட்டுத் துறையில் பணியாற்றினார். கைத்தறி மற்றும் மீன்வளத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு பொருளாதார முயற்சிகளில் பெண்களின் ஈடுபாடு குறித்து அவரது ஆய்வுகள் இருந்தன. பெண்கள் மேம்பாட்டு குறித்த பிரச்சனைகளில் சேத் தனது கல்வி மற்றும் ஆய்வு அறிவைப் பயன்படுத்தினார். இவர் தனது ஆய்வுகளின் தொகுப்பினை பல கோரிக்கைகளுக்குப் பின்னர் ”பெண்கள் மற்றும் மேம்பாடு: இந்திய அனுபவம்” என்ற நூலாக மாற்றினார். சேத்தின் முக்கிய இலட்சியங்களில் ஒன்று, 'எங்களுக்கு வேலைகளை கொடுங்கள்- மீதமுள்ளவற்றை நாங்கள் செய்ய முடியும்' என்பதாகும். இந்த இலட்சியமானது, வளரும் நாடுகளில் தடைகள் இல்லாமல் பெண்களுக்கு தொழிலாளர் தொகுப்பில் நுழைவதற்கான திறனை வழங்குவது இன்னும் பெரிய பொருளாதார வளர்ச்சியை அனுமதிக்கும் என்ற கருத்தை குறிப்பிடுகிறது. சேத் 'மேரா ஷிண்டர் புட்டார்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், இது ஒரு சட்டவிரோத குடியேறியவரின் சோதனைகள் மற்றும் துன்பங்கள் மற்றும் அவர் இந்தியாவில் விட்டுச் சென்ற குடும்பத்தைப் பற்றி பேசுகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Officers of the UNICEF Executive Board 1946–2014, UNICEF
- ↑ Executive Board பரணிடப்பட்டது 2019-01-09 at the வந்தவழி இயந்திரம், UNICEF