உள்ளடக்கத்துக்குச் செல்

மீனு தூவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனு தூவே
Minou Drouet
மீனு தூவே தன் தாயாருடன் (1960)
மீனு தூவே தன் தாயாருடன் (1960)
பிறப்புMarie-Noëlle Drouet
தொழில்
  • கவிஞர்
  • இசைக்கலைஞர்
  • நடிகை
மொழிபிரெஞ்சு
தேசியம்பிரெஞ்சு
வகைகவிதை

மீனூ தூவே (Minou Drouet, பிறப்பு 24 சூலை 1947) என அழைக்கப்படும் மேரி-நோயல் தூவே என்பவர் பிரான்சின் லா குர்சே-டி-பிரேக்னேவைச் சேர்ந்த ஒரு முன்னாள் கவிஞர், இசைக்கலைஞர், நடிகை ஆவார்.

வாழ்கை குறிப்பு

[தொகு]

1955 ஆம் ஆண்டில் இவரது சில கவிதைகள் மற்றும் கடிதங்கள் பிரெஞ்சு எழுத்தாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் பார்வைக்கு தனிப்பட்ட முறையில் கொண்டு சேர்க்கப்பட்டது. இந்த ஆக்கங்களின் உண்மையான ஆசிரியராக தூவேயின் தாயான கிளாட்டாக இருக்கலாம் என்று ஐயமும், சர்ச்சையும் உண்டானது. துவே தன் தாயார் இல்லாமல் சாட்சிகள் முன்னிலையில் கவிதைகளை எழுதி இந்த ஐயத்தின் பெரும்பகுதியை விரைவில் போக்கினார். பின்னர் பிரான்சின் எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் இசை வெளியீட்டாளர்கள் சங்கத்தில் உறுப்பினராவதற்கான தகுதித் தேர்வில் கலந்து கொண்டார். அங்கு தனி அறையில் இவரை அமர வைத்து இரு தலைப்புளில் ஒன்றைப் பற்றி கவிதை எழுதச் சொன்னார்கள். அப்போது பாரிஸ் நகர வானம் என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார்.[1] [2] தூவே பியானோ மற்றும் கித்தார் ஆகியவற்றையும் கற்றார். 1950 களின் பிற்பகுதியிலும் 1960 களின் முற்பகுதியிலும், தூவே ஒரு எழுத்தாளராகவும் இசைக்கலைஞராகவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பின்னர் பாடகர்-பாடலாசிரியர் மற்றும் குழந்தைகள் புதின ஆசிரியராக பொது வாழ்க்கைக்கு திரும்பினார். இவர் பெரியவர்கள் படிக்கதக்கக்க ஒரு புதினத்தை எழுதினார்; ஆங்கில மொழிபெயர்ப்பில் அதன் பெயர் டொனாடெல்லா . 1966 ஆம் ஆண்டில் இவரது பாட்டி நோய்வாய்ப்பட்ட பிறகு, தூவே இரண்டு ஆண்டுகள் செவிலியாக பணியாற்றினார். அப்போது வெளியுலக தொடர்பைக் குறைத்துக் கொண்டார். [3]

இறுதியில், ட்ரூயட் லா குர்சே-டி-பிரெட்டேக்னில் உள்ள தனது குழந்தைப் பருவ வீட்டிற்குத் திரும்பினார். அவர் இப்போது தனது கணவர் ஜீன்-பால் லு கானுவுடன் வசித்து வருகிறார். மேலும் 1993 இல் Ma vérité (எனது உண்மை) என்ற சிறிய சுயசரிதையை வெளியிட்டார். பின்னர் மீண்டும் வெளியுலக வாழ்வில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். [3]

நூல் பட்டியல்

[தொகு]

ஆங்கிலத்தில் இவரின் படைப்புகள்

[தொகு]

மீது தூவேயின் நூல்கள்

[தொகு]

மீனு தூவே குறித்த எழுத்தாக்கங்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "குழந்தை மேதைகள் 6: உலகம் சந்தேகித்த எட்டு வயதுக் கவிஞர்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  2. Kitten on the Keys பரணிடப்பட்டது 2015-07-24 at the வந்தவழி இயந்திரம் டைம் இதழ் Jan. 28, 1957.
  3. 3.0 3.1 Gottlieb, Robert. "A Lost Child", The New Yorker. 6 November 2006, pp. 70-77.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனு_தூவே&oldid=3643537" இலிருந்து மீள்விக்கப்பட்டது