மீனாட்சியம்மாள் நடேசய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீனாட்சியம்மாள் நடேசய்யர்
தேசியம்மலையகத் தமிழர்
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், மனித உரிமை செயற்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
கோ. நடேசய்யர்

மீனாட்சியம்மாள் நடேசய்யர் மலையகத் தமிழ் கவிஞர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர்.[1] இவரின் பல கவிதைகள் மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார, வாழ்வியல் சிக்கல்களை எடுத்துரைத்து, அவர்களை தமது உரிமைகளுக்காகப் போராடும்படி தூண்டி அமைந்துள்ளன. இவர் மலையகத்தின், ஈழத்தின் முதல் பெண் கவிஞர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.[2] இவர் மலையக அரசியல்வாதியும், தமிழறிஞரும், பதிப்பாளருமான கோ. நடேசய்யரின் மனைவி ஆவார்.

இலங்கையில் பெண்களின் உரிமைகளுக்காக, குறிப்பாக வாக்குரிமைக்காக இவர் சிறப்பாக செயற்பட்டார்.

படைப்புகள்[தொகு]

  • இந்தியத் தொழிலாளர் துயரச்சிந்து – இரண்டு பாகங்கள் - 1931 - சகோதரி அச்சகம், அட்டன்
  • இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை - 1940 - கணேஸ் பிரஸ், அட்டன்

எடுத்துக்காட்டுக் கவிதைகள்[தொகு]

'பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்- அந்நாள்
பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்
தாய்நாடென் றெண்ணி யிருந்தோம்- இவர்கள்
தகாத செய்கைக் கண்டு மனமிக நொந்தோம்’

மேற்கோள்கள்[தொகு]

  1. மறைக்கப்பட்ட ஆளுமைகள் – திருமதி மீனாட்சியம்மாள் நடேசய்யரை முன்னிறுத்தி..! : லெனின் மதிவானம்
  2. வரலாறு, அரசியல், சமூக நிலை பாடி நிற்கும் மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு

வெளி இணைப்புகள்[தொகு]