மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர்
இயக்கம்அபர்ணா சென்
தயாரிப்புN. வெங்கடேஷன்
ரூபாலி மேதா
கதைஅபர்ணா சென்
டுலால் டேயோ
இசைசகீர் ஹுசைன்
நடிப்புராகுல் போஸ்
கொங்கொன சென் சர்மா
பிஷம் சாகினி
சுரேகா சிக்ரி
சுனில் முகெர்ஜி
அஞ்சன் டத்தா
எசா சௌகான்
விஜய சுப்ரமணியம்
A.V. ஐயங்கார்
நிகாரிக்க சேத்
விநியோகம்மேட்மேன் எண்டெர்டெயின்மெண்ட்
வெளியீடு2002
ஓட்டம்120 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்

மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர் (Mr. and Mrs. Iyer) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தினை பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரான அபர்ணா சென் இயக்கினார்.

வகை[தொகு]

நாடகப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மீனாக்சி ஐயர் (கொங்கொன சென் சர்மா) தமிழ் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராவார். மீனாக்சி தனது 9 மாத பிள்ளையுடன் பேருந்தில் நண்பரின் இல்லத்திற்குச் செல்லும் வழியில் ராஜா சௌத்ரி (ராகுல் போஸ்) எனும் இஸ்லாமிய இளைஞரைச் சந்திக்கின்றார். ஆரம்பத்தில் அவர் ஒரு இந்துவென நினைத்துப் பழகும் பின்னர் ஒரு இஸ்லாமியர் எனத் தெரிந்து அவரிடம் இருந்து விலகியே இருக்கவும் காணப்பட்டார். அவர்கள் பயணம் செய்யும் பேருந்து திடீரென வரும் இந்துக் கும்பலால் தடுத்து நிறுத்தப்படுகின்றது. இஸ்லாமியர்களாக உள்ள அனைவரையும் கொலை செய்யப் போவதாகக் கூறிக்கொள்ளும் அக்கும்பல் இஸ்லாமிய மதத்தவர்களை அழைக்கும் போது அங்கு தன்னுடன் இருந்த ராஜாவைக் மனிதாபிமான அடிப்படையில் காட்டிக் கொடுக்க மறுக்கின்றார் மீனாக்சி. அதே வேளை அக்கும்பல் அங்கு இஸ்லாமியர்களாக இருந்த முதியவர்களை வெளியே வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றது. சிறிது நேரங்களில் அருகில் இருக்கும் ஊருக்கு செல்லும் இருவரும் அங்கிருந்த விடுதியொன்றில் தங்குகின்றனர். பின்னர் அங்கு வரும் பலர் கேட்கும் போதெல்லாம் ராஜா தனது கணவர் என அவரைக் காப்பாற்றுவதற்காக கூறிக்கொள்ளும் மீனாக்சி இறுதியில் அவரை காப்பாற்றி பின்னர் புகையிரத நிலையத்திலிருந்து பிரிந்து செல்கின்றார்.

விருதுகள்[தொகு]

2002 லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா (சுவிர்சலாந்து)

2002 ஹவாய் சர்வதேச திரைப்பட விழா (அமெரிக்கா)

  • வென்ற விருது - சிறந்த திரைப்படம் - மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர் - அபர்ணா சென்

2003 பிலடெல்பியா திரைப்பட விழா (அமெரிக்கா)

  • வென்ற விருது - மக்கள் விருது- சிறந்த திரைப்படம் - மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர் - அபர்ணா சென்

2003 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது - கோல்டன் லோட்டஸ் விருது- சிறந்த இயக்குனர் - அபர்ணா சென்
  • வென்ற விருது - சில்வெர் லோட்டஸ் விருது- சிறந்த நடிகை - கொங்கொன சென் சர்மா
  • வென்ற விருது - சில்வெர் லோட்டஸ் விருது- சிறந்த திரைக்கதை - அபர்ணா சென்
  • வென்ற விருது - நர்கிஸ் டட் விருது- சிறந்த திரைப்படம்- மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர் - அபர்ணா சென், N. வெங்கடேசன்

2003 சினிமனிலா சர்வதேச திரைப்பட விழா (பிலிப்பைன்ஸ்)

  • வென்ற விருது - சிறந்த திரைக்கதை - அபர்ணா சென்