மிலேச்சர்
Appearance
கிரேக்கர்கள் இந்தியா வந்து வாணிகம் செய்தனர். அவர்களில் சிலர் தமிழ் அரசர்களிடம் நன்றி உணர்வு மிக்கவராய் விளங்கினர். அவர்களைத் தமிழ் அரசர்கள் தம் மெய்க்காப்பாளராக அமர்த்திக்கொண்டனர். அவர்களை 'உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர்' என்று சங்கப்பாடல் குறிப்பிடுகிறது. [1]
படம் என்பது மெய்க்கவசம். அதனை array என்கிறோம். இவர்கள் ஊமைகளாய் இருந்திருக்கிறார்கள். தமிழ் அரசர்களிடம் நன்றி உணர்வு இல்லாமல் நடந்துகொண்ட யவனரை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் கட்டுக்காவலுக்குள் கொண்டுவந்த செய்தியையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑
உடம்பின் உரைக்கும், உரையா நாவின், 65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, (முல்லைப்பாட்டு 65-66)