மிரிசவெட்டி தாதுகோபுரம்
மிரிசவெட்டி தாதுகோபுரம் இலங்கையின் பழங்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் அமைந்துள்ளது.[1] 40 ஆண்டுகளுக்கு மேல் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்த பின்னர் மன்னன் துட்டகைமுணு இந்தத் தாதுகோபுரத்தைக் கட்டுவித்தான். இவ்விடத்தில் தாதுகோபுரம் கட்டப்பட்டது குறித்த கதை ஒன்று உண்டு. புத்தரின் சின்னங்களை ஓரிடத்தில் வைத்துவிட்டு துட்டகைமுணு திசவாவியில் குளிப்பதற்குச் சென்றானாம். திரும்பி வந்து எடுக்க முயற்சித்தபோது அதை அசைக்க முடியவில்லையாம். எனவே அவ்விடத்திலேயே தாது கோபுரம் கட்டப்பட்டதாம். 50 ஏக்கர் (20 எக்டேர்) பரப்பளவில் இது அமைந்துள்ளது. பிற்காலத்து மன்னர்களான முதலாம் கசியபன், ஐந்தாம் கசியபன் ஆகியோர் இந்தத் தாதுகோபுரம் பழுதடைந்த காலங்களில் திருத்தி அமைத்துள்ளனர். அழிபாடாக இருந்த இதை அண்மையில், கலச்சார முக்கோண நிதியம் திருத்தி அமைத்தது.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- Discover Sri Lanka - மிரிசவெட்டி தாது கோபுரம் தொடர்பிலான மேலதிக தகவல்களும் படங்களும் பரணிடப்பட்டது 2011-07-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "The Official Website of Mirisawetiya Maha Dagaba - Sri Lanka". Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2010-11-05.