மின்னீரியமாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மின்னீரியமாக்கல் (Electrohydrogenesis) என்பது ஐதரசன் வாயுவை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தயாரிப்பு முறையாகும். இம்முறையை மின்னைதரசனாக்கல், உயிரிவினையூக்க மின்னாற்பகுப்பு முறை என்ற பெயர்களாலும். அழைக்கலாம். இத்தயாரிப்பு முறையில் கரிமப் பொருட்கள் பாக்டீரியா மூலம் சிதைக்கப்பட்டு ஐதரசன் வாயு தயாரிக்கப்படுகிறது [1]. கரிமப்பொருளும் தண்ணீரும் கொண்ட மேம்படுத்தப்பட்ட எரிபொருள் மின்கலம் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறிதளவு மின்சாரமான 0.2–0.8 வோல்ட்டு[2] அளவு மின்னோட்டத்தை மட்டும் பயன்படுத்தினாலேயே 288 சதவீதம் உற்பத்தி செயல்திறனை அடைய முடியும் என்று அசல் கட்டுரை தெரிவிக்கிறது. பயன்படுத்தப்படும் மின்னோட்டத்தின் அளவுக்கு தகுந்தபடி உற்பத்தி திறனும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. வீணாகும்வெப்பம் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை பாதிக்கிறது. செங் மற்றும் லோகன் ஆகியோர் இத்தயாரிப்பு முறையைக் கண்டறிந்தனர்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hydrogen production through biocatalyzed electrolysis". 2016-12-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-08-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. Cheng, S; Logan, BE (November 2007). "Sustainable and efficient biohydrogen production via electrohydrogenesis". Proc. Natl. Acad. Sci. U.S.A. 104: 18871–3. doi:10.1073/pnas.0706379104. பப்மெட்:18000052. 
  3. Shaoan Cheng; Bruce E. Logan (2007-11-20). "Sustainable and efficient biohydrogen production via electrohydrogenesis". Proceedings of the National Academy of Sciences 104 (47): 18871–18873. doi:10.1073/pnas.0706379104. பப்மெட்:18000052. பப்மெட் சென்ட்ரல்:2141869. http://www.pnas.org/cgi/doi/10.1073/pnas.0706379104 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னீரியமாக்கல்&oldid=3224802" இருந்து மீள்விக்கப்பட்டது