மின்னழி நிரல்மாறு படிக்க மட்டும் நினைவகம்
மின்னழி நிரல்மாறு படிக்க மட்டும் நினைவகம் (மிநி பம நினைவகம் ) (ஆங்கிலம்:EEPROM-Electrical Erasable Programmable Read Only Memory ) என்பது தன்னை இயக்கும் மின்னாற்றலை நீக்கினால் கூட தனக்குள் பதிந்து அல்லது சேமித்து வைத்து இருக்கும் தரவுகளை அழிந்துவிடாமல் அப்படியே வைத்துக் கொள்ளும் தரவழியா நினைவகம் (நான்-வோலடில் மெமரி) ஆகும். இது தொலைக்காட்சி பெட்டிகள், கணினிகள், மற்றும் இதர மின்னணு (மின்ம)க் கருவிகளில் சிறிய அளவான தரவுகளை சேமிக்க பயனாகிறது. குறிப்பாக தொலைக்காட்சியில் ஒளிவீச்சு அளவு, அலைவரிசை இசைப்பு அமைப்புகள் (சேனல் டூனிங் செட்டிங்க்ஸ்) அல்லது கணினியில் நேரம் அல்லது துவக்காயத்தம் (BIOS-Basic Input Output System) ஆகிய அமைப்புகள் சேமிக்கப்படுகின்றன. இவ்வமைப்புகளில் மின் திறன் அகன்றாலும் தரவு இழக்கப்படுவதில்லை[1][2][3]
துவக்கப் பதிமென்பொருள் (பூட்அப் பேர்ம்வேர்) போன்ற அதிக அளவு தரவுகளுக்கு சேர்ந்தியங்கு ஒளிப்பு நினைவகம் (பிளாஷ் மெமரி) பயனாகிறது. சேர்ந்தியங்கு திடீர் நினைவகம் உள்ளமைவுத் தரவுகளுக்கு பொதுவாகப் பயனாவதில்லை.
மின்னழிநிரல் நினைவகம் மிதப்பு வாயில் தொழில்நுட்பத்தால் (ப்லோடிங் கேட் டெக்னாலஜி) செயல்முறைப்படுத்தப்படுகிறது.
வரலாறு
[தொகு]1978 ஆம் ஆண்டில் ஜார்ஜ் பெர்லேகோஸ் என்பவர் இன்டெல் நிறுவனத்தில் இன்டெல் 2816 என்ற செயலியை தயாரித்தார். அதில் மிநி பம ( இ-இ-புரோம்) நினைவகத்தின் முந்தைய கண்டுபிடிப்பான நிபம ( இ-புரோம்) நினைவகத்தினை பயன்படுத்தினார். அதில் மென்வாய் ஒட்சைட்டு அடுக்கை பயன்படுத்தினார். இதனால் சில்லு அதன் பிட்களை புற ஊதா ஆதாயம் இல்லாமலே அழிக்க முடிவதை உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TN-04-42: Memory Module Serial Presence-Detect" (PDF). Micron Technology. 2002. Archived from the original (PDF) on 2022-07-26. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.
- ↑ "serial presence detect (SPD)". TechTarget. July 2015.
- ↑ US3865652A, "Method of forming self-aligned field effect transistor and charge-coupled device", issued 1975-02-11