உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மின்னழி நிரல்மாறு படிக்க மட்டும் நினைவகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

read only என்பதை தமிழாக்கம் செய்ய வில்லையே ? --இராஜ்குமார் 10:18, 8 ஏப்ரல் 2010 (UTC)

read only memory படிப்பு நினைவகம் ஆகும். நிரல்நினைவகம் என்றாலே படிப்பு நினைவாகம் என்கிற பொருள் உட்செர்ந்துள்ளது. அழிவுறு நிரல்நினைவகம் (Volatile PROM) என்பது ஒன்றும் கிடையாது. ராஜ் (தொழில்நுட்பம்) - 8-4-2010

EEPROM , flash memory , USB device என்பது எல்லாமே முதலில் ஒரு non-volatile memory ( அழியா நினைவகம் ) என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் . --இராஜ்குமார் 11:21, 8 ஏப்ரல் 2010 (UTC)


read only

[தொகு]

read only memory - மாறிலி நினைவகம் , படிக்க மட்டுமே பயன்படுத்தும் நினைவகம்

நிரல்நினைவகம் படிப்பு நினைவகம் வகையாகும், ஆனால் எதிர்மாறு அவ்வாறு அமைவதில்லை. (Programmable Memory is Read Only, vice versa not always true) தமிழக அரசு நூல்களில் படிப்பு நினைவகம் என்கிற சொல்லமைவு புழக்கத்தில் உள்ளது. எந்தச் சொல்லாக இருந்தாலும் சொல் செந்தரப்பாடு (Standardization of Terms) செய்யப்பட்டால் நன்று. ஆனால் இதுவரை தமிழில் அவ்வாறு திட்டம் இல்லம். மாறாக சீனம் (Chinese Association of Academic Sciences) போன்ற ஏனைய மேல் மொழிகளில் சொல் செந்தரப்பாடு செய்யப்பட்டுவருகின்றன.

தமிழின் இந்த பெரிய குறைபாடு நீங்குமென நம்புகிறேன். ராஜ் (தொழில்நுட்பம்) - 8-4-2010

உங்கள் கருத்துகள் விரிவாகக் கருத்தாட வேண்டியன. தரப்படுத்துதலுக்கு கூடிய விரைவில் ஏற்பாடுகள் செய்வோம். இது பற்றி நாம் தனி மடலிலும் உரையாடியுள்ளோம். ஆவியாதல் (volatile ), திடீர் (flash) போன்ற சொற்களை நீக்கியுள்ளேன். ஆங்கிலத்தில் வழங்கும் அச்சொற்களை அவ்வாறு தமிழில் மொழிபெயர்த்தால் பொருந்தாது. read only memory என்பதை படிக்கமட்டுமே பயன்படும் நினைவகம் (பமப நினைவகம்) என்றும் மற்றதை எழுதப்படிக்கப் பயன்படும் நினைவகம் (எபப நினைவகம்) என்றும் சொல்லலாம். Programmable ROM வகைகளை மாற்றக்கூடிய பமப நினைவகம் எனலாம். புற ஊதாக்கதிர் கொண்டு மாற்றக்கூடியனவும் உண்டு (பழசு), மின்முறையில் மாற்றக்கூடியதும் உண்டு. மின்முறையில் அழித்தெழுதவல்ல பமப நினைவகம் என்பதை மிஅபமப நினைவகம் எனலாம். Gate என்பதைக் கதவம் எனலாம். நிறைய சொல்ல வேண்டும்.. பின்னர்.. --செல்வா 13:27, 8 ஏப்ரல் 2010 (UTC)
மின்முறையில் மாற்றவல்ல பமப என்று கொண்டால் மிமா பமப என சொல்ல எளிதாக இருக்கும். பொருளும் சரியாகவே இருக்கும். Italic text
செல்வா . மின்முறையில் மாற்றவல்ல பமப , programmable என்பதை மறந்துவிட்டீர்களே ? -- இராஜ்குமார் 13:40, 8 ஏப்ரல் 2010 (UTC)
மாற்றவல்ல என்னும் சொல் அக்கருத்தையும் சேர்த்திப் பிடித்துவிடும் அல்லவா? --செல்வா 13:45, 8 ஏப்ரல் 2010 (UTC)
நாம் programmable என்பதனையும் உள்ளடக்க வேண்டும் என்று என் மனதில் படுகிறது . இல்லையானால் அது EEPROM என்று அறியாமல் EEROM என்று உணர நேர்ந்திடும். -- இராஜ்குமார் 14:08, 8 ஏப்ரல் 2010 (UTC)

அடைகுறியில் நிரல்படு சேர்க்கலாம் (முழு சொல்), ஆனால் சுருக்கச் சொல்லாக நிரல்படு என்கிற சொல்லை விடலாம். ராஜ் (தொழில்நுட்பம்) - 8-4-2010


எந்தச் சொல்லாக இருந்தாலும்ம் சரி தரமான சொல்லைப் பயன்படுத்த வேண்டும். திடீர் நினைவகம் என்கிற சொல்லில் என்ன குறை என்பது எனக்கு தெரிய வில்லை. புதிது புதிதாக சொற்களைப் பயன்படுத்துவது சரியல்ல என்பது நான் நினைக்கிறேன் தமிழ்நாடு அரசு சொற்களில் ஏற்கனவே குழப்பம் நீடித்துள்ளது. Wikipediaவிலுமா? Flashக்கு சேர்ந்து இயங்கு என்கிற சொல் சரியில்லை என்பது எனது கருத்து, USB Boot, ROM Boot, Flash Boot, Disc Boot ஆகியவையில் மென்பொருள் துவக்கம் அமைக்கப்படுகின்றன. Flash என்கிற சொல்லிற்கே விரைவான தரவு பெறல் என்பதிலிருந்து பெயர் சூட்டப்பட்டது. திடீர் நினைவகம் சரியாக பொருந்தும் என நினைக்கிறேன். அனைத்து தமிழ் நூல்களில் வாயில் என்றே தரப்பட்டுள்ளது, இப்போது கதவம் என தந்தால் குழப்பம் தான்!!!! அனைத்து மாணவர்கள் Gateக்கு வாயில் என்றே பயில்கின்றனர். அவர்கள் எப்படி Wikipediaவை மேற்கோள் செய்வார்கள். சொற்களை திடீரென மாற்றினால், முரண்பாடுகள் ஏற்படுகிறது, Wikipedia பங்களிப்பது பயனில்லாமல் போய்கிறது.


ராஜ் (தொழில்நுட்பம்) - 8-4-2010


பிளாஷ் என்ற சொல்லுக்கு திடீர் என்பது சரியானது அல்ல. திடீர் ஒளி என்று சொல்லலாம் . sudden light . இதனை வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால் , பளிச்சிடுதல் , பளிச்சிடுகை . இவ்வாறான சொற்கள் பொருத்தமானது என்று எண்ணுகிறேன் . -- இராஜ்குமார் 14:27, 8 ஏப்ரல் 2010 (UTC)

சரியானது தான். Flash என்கிற சொல் "In a Flash " என்கிற ஆங்கில சொற்றோடரிளிருந்து பெயர் சூட்டப்பட்டது. Flashன் வரலாற்றைப் படிக்கவும். Flash Light அல்ல. திடீர் நினைவகம் சரி தான்.

ராஜ் (தொழில்நுட்பம்) - 8-4-2010


நீங்கள் பிளாஷ் மெமரி இன் வரலாறை காணவும் . அதில் பிளாஷ் என்ற சொல் flash light of camera வில் இருந்து உருவானது . இவ்வகையான நினைவகங்களுக்கு பிளாஷ் என்ற சொல்லை எப்படி பயன்படுத்தினார்கள் என்றால் , படம் பிடி கருவியில் இருந்து ஏற்ப்படும் பளிச்சிடும் ஒளியின் காரணமாக , ஒரு நினைவகத்தில் உள்ள தரவுகளை அழித்து எழுதுவதாக அமைக்கலாமே என்ற சிந்தனை தோன்றிற்று . அதனாலேயே , இது பிளாஷ் மெமரி என்று பெயர் சூட்டப்பட்டது . -- இராஜ்குமார் 14:40, 8 ஏப்ரல் 2010 (UTC)


உங்கள் கருத்தை ஏற்ப இயலாது. ஏற்கனவே தந்த சொல்லை மாற்ற முன்மொழிக்கிறீர்கள். இந்த உரையாடல் கட்டுரையை விட பெரிதாக்கி விட்டது . "திடீர் நினைவகம்" என்கிற சொல்லை அப்படியே எடுத்து GOOGLEஇல் தேடிப்பார்க்கவும். சில இணையதளங்களில் பயனாகிறது. இப்போது அது கூடாது அது தவறு என்கிறீர்கள். நீங்கள் புதிய பெயர் என்னவென்றாலும் சுடலாம். MGR நினைவகம், காமராஜ் நினைவகம் என்றே அழைக்கலாம்!!! . எந்த சொல் இணையம் அச்சு ஆகியவற்றில் புழக்கத்தில் உள்ளதோ அதுவே பயன்படுவது சிறந்தது. "திடீர் நினைவகம்" அதிக புழக்கத்தில் உள்ளது !!! Tamil Wikipediaவில் சொல்லை அழித்து மாற்றுவது ஒரு பெரிய சாபமாக்கி விட்டது!!! பங்களிப்பை விட சொல் குறைக்காணும் உரையாடலே பெரிது !!! அதனால் இந்தி தெலுங்கு போன்ற ஏனைய Wikipedia க்கள் முன்னிற்கின்றன !!! மன்னிக்கவும் !!!!

ராஜ் (தொழில்நுட்பம்) - 8-4-2010

இணையத்தில் ஒருவர் நினைப்பதைத்தான் எழுதுகிறார்கள் . விக்கி வந்த பிறகு ஏன் , எதற்கு என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிகிறது. ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஆழ்ந்த கரு இருக்க வேண்டும் . விக்கியில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது . எனக்கு ஏற்படும் ஐயங்களை நான் கேட்கிறேன் . விளக்கம் சரியானதாக இருந்தால் ஏற்றுகொள்வேன். பிசின் , இயக்கி ஆகிய கட்டுரையின் பேச்சு பக்கத்தை பாருங்கள் . என் கருத்து தவறென்று உணர்ந்தேன் . நான் உங்கள் கட்டுரையில் volatile ஐ non-volatile என்று நான் மாற்றினேன் . வேறு எந்த மாற்றமும் நான் செய்ய வில்லை . நான் குறை சொல்ல ஞானி அல்ல. எனக்கு தெரிந்த சில செய்திகளை பகிறுகிறேன் . தவறென்றால் தவறென்று சொல்வேன். இப்பொழுது ஓரிருவர் பயன்படுத்தும் பொழுதே தவறுகளை திருத்திவிட்டால் நல்லது . அதற்கான காரணங்களும் எழுதி வைத்தால் நன்று . அதற்காக இதை தவறென்று சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள் .உரையாடினால் தான் நிறைய செய்திகள் தெரிய வரும் . ஒரு தெளிவு வரும் . ஒருவர் குறை கூறிக்கொண்டே இருந்தால் கோவம் வருவது இயல்பு . ஆனால் இதனால் தான் தமிழ் விக்கி முன்னேர வில்லை என்று சொல்வது சரி அல்ல . அவர்களைவிட தமிழ் விக்கி தெளிவாகிறது என்று எண்ணுங்கள் . -- இராஜ்குமார் 15:35, 8 ஏப்ரல் 2010 (UTC)


Flash என்னும் சொல்லை மொழி பெயர்க்ககூடாது ஐயா. ஒன்றொன்றாக பிட்டு பிட்டாக மாற்றாமல், அணியாக (அடுக்காக) ஒருசேர எழுதவோ அழிக்கவோ பயன்படுமாறு அமைந்ததால் இதற்கு Flash என்று பெயர். அதாவது கூட்டாக ஒரு அணியாகத்தான் எழுதவோ அழிக்கவோ இயலும்.. இத்தொழில்நுட்பம் பற்றி சிறிது அறிவேன், தொடக்க நாளின் இருந்து படித்தும் வந்துள்ளேன். அணியணியாக எழுதவோ அழிக்கவோ இயலும் என்பதால் விரைந்து தரவு கடத்தல் நிகழும். ஆனால் திடீர் என்னும் சொல் அறவே பொருந்தாத ஒன்று. திடீர் என்றால் sudden (எதிர்பாராமல் நிகழும்) என்னும் பொருள் தரும். த்வறானது புழக்கத்தில் இருந்தால் நீக்க வேண்டும். இப்பொழுது பெரிய அளவிலே புழக்கத்தில் இன்னும் வந்துவிடவில்லை என்றே நினைக்கின்றேன் (என்னைத் திருத்திக்கொள்ள அணியமாக உள்ளேன்). --செல்வா 15:33, 8 ஏப்ரல் 2010 (UTC)

தமிழகத்தில் திடீர் ரசப்பொடி (ஆங்கிலத்தில் Instant Rasam Mix) என விற்கிறது. இந்த பெயரும் தவறு தான். ஆனால் எல்லாம் அங்காடிகளிலும் காணலாம். வைத்தப் பெயரை அவ்வாறே விடுவது என் கருத்து. "காந்தி கணக்கு" என்கிற சொல்லும் தவறு தான். அது காந்தியடிகளுக்கே அவமானம்! ஆனால் புழக்கத்தில் உள்ளது. சிலதை ஏற்பது நன்று இல்லையெண்டால் பெயரில்லாமல் போகும். BJTஇலும் FETஇலும் "Saturation Region" ஆங்கிலத்தின் மிகப்பெரிய முரண்பாடு!!! வரையறு ஒரு தரமாக இல்லை....மாற்ற முடியுமா ? Flash என்கிற ஆங்கில சொல்லே தவறுதான். பெயர் அமைந்த சொல் புழக்கமாகிறது. Greenland, Iceland என்கிற முரண்பாடு இன்னொன்று. பெயர் முரண்பாட்டை விட புழக்கம்மனான "தவறு" பெயர் சிறந்தது. தமிழில் மூலிகை பெயர்களைப் பார்த்தால் வியப்படைவீர்கள்..!!!! அவைகளையும் இனி மாற்ற முடியுமா ? ராஜ் (தொழில்நுட்பம்) - 8-4-2010

இரசப்பொடி, காப்பி முதலியன முன்னேற்பாடு ஏதும் அதிகம் இல்லாமல் திடீர் என்று உருவாக்க உதவுவதால் திடீர் என்னும் முன்னொட்டு பெற்றன. இங்கே இவற்றில் instant என்பதற்கு ஈடாகப் பயன்படுகின்றது. அவற்றை மாற்றப் பரிந்துரைக்கவில்லை. அது சரியான பயன்பாடு!! BJT (ருமின்மிய திரிதடையம் - இமிதி) -இலும், FET (மின்புலக் ட்டுப்பாட்டு திரிதடையம் -மிகதி) -இலும் Saturation Region என்பன பொருத்ததுடன் பெயர் சூட்டியுள்ளனர். குழப்பத்துக்குக் காரணம், இமிதி-யில் ஏன் அவ்வாறு அப்பெயர் பெற்றது என பலர் அறியாததால். சற்றுப் பொறுமையாக பின் வருவனவற்றைப் படித்துப் பாருங்கள். திரிதடையத்தின் (transistor) இரு முனைக்களுக்கு இடையே மின் அழுத்தம் மாறினாலும் அவற்றுக்கு இடையே பாயும் மின்னோட்டம் மாறாமல் ஒரே மட்டாக இருப்பதை மிகதி-யில் (FET) மட்டமின்னோட்ட வெளி என்கிறோம் அல்லது மட்டுப்பெற்ற அல்லது நிறைவெய்திய வெளி (saturation region) என்கின்றோம். இந்த மட்டுப்பெற்ற மின்னோட்ட அளவை கதவ முனைக்கும் (Gate terminal) உமிழ்வாய் (source) முனைக்கும் இடையே உள்ள மின்னழுத்தம் கட்டுப்படுத்தும். மின்னோட்டம் மட்டுப்பெற்றதால் (நிறைவெய்தியதால்) Saturation Region (current is "saturated" - நிறைவெய்தியது) நிறைவெளி என்கிறோம். ஆனால் இமிதி (BJT)-யில் திரட்டி (colletor) மின்னோட்டம் மாறாமல் மட்டுப்பட்டிருக்கும் பகுதியை மட்டுப்பெற்ற வெளியாக கூறாமல், திரட்டி-உமிழி (collector-emitter) மின்னழுத்தம் மாற மாற திரட்டி மின்னோட்டம் ஏறிக்கொண்டே போகும் "முன் பகுதி"யை நிறைவெய்து வெளி எனக் கூறுகிறோம். இதற்குக் காரணம் முற்றிலும் வேறான ஒன்று. இமிதி-யில் இரண்டு சந்திகள் அல்லது இணைமுகங்கள் (இடைமுகங்கள்) (Junctions) உண்டு. இரண்டு சந்திகளும் நேரழுத்த முறையில் (Forward bias) இருந்தால், இரண்டு சந்திகளும், ஏராளமான மின்மிகளை நடுப்பகுதியாகிய அடிமனைப் பகுதியில் (base) பொழிந்து "திகட்ட" (நிறையச்) செய்வதால் (saturated with charge carriers), அதனை நிறைவெளி என்கின்றோம் (Saturated Region). எனவே இரண்டும் நிறைவெளிதான் ஆனால் வெவ்வேறு காரணத்தால் அப்பெயர் பெருகின்றன. இதனை மிக விரிவாக எழுதலாம் (பின்னர்)(படங்களுடனும் ஈடுகோள்கள், சமன்பாடுகளுடனும்). எங்கெல்லாம் சரியான பெயர் வழங்க இயலுமோ அங்கெல்லாம் சரியான பெயர் வழங்க முயலவேண்டும். திடீர் என்பதையும் ஆவியாதல் என்பதனையும் அருள்கூர்ந்து விலக்குங்கள். அவை அறவே பொருந்தாதன. ஆங்கிலத்திலும் பல கலைச்சொற்கள் இன்றளவும் மாறிக்கொண்டேதான் வருகின்றன. செடி-கொடிகளுக்குமான "அறிவியற்" சொற்களும் மாறுகின்றன. --செல்வா 18:13, 8 ஏப்ரல் 2010 (UTC)

Saturated region தமிழ்நாட்டு நூல்களில் தெவிட்டல் மண்டலம் என குறிப்பிடுகிறார்கள். எனினும் இதுவும் தவறுதான். ஆனால் பாடநூல்களில் புழக்காகி உள்ளது. BJT / FET Saturated Region பற்றி நீங்கள் சொல்லும் காரணங்கள் சரி. எனினும் இந்த வரையறு வேறுபாடு Art of Electronics மற்றும் இதர நூல்களில் வருத்தத்துடன் வர்ணிக்கப்பட்டது. Carrot தமிழில் மூலிகை நூல்களில் மஞ்சள் முள்ளங்கி எனப்படுகிறது. ஆனால் அது மஞ்சளாக இல்லை. இது தவறுதான். பெரும்பாலும் தமிழர்களுக்கு Carrot தமிழிலும் Carrot தான் மஞ்சள் முள்ளங்கி என சொன்னால் வியப்பு. ஆனால் உண்மை. நீங்கள் பரிந்துரைக்கும் சொற்கள் இமிதி, கதவம் தமிழ்நாட்டு அரசு புழக்கத்தில் இல்லை. என்னை பொறுத்த வரை அது எனக்கு சரி. ஆனால் தமிழ்நாடு வெளியீடு நூல்கள் மற்றும் இச்சொற்கள் இப்போது முரண்பாடாக அமைகின்றன. இச்சொற்களை தமிழ் நாடு அரசு ஏற்றால், எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் திடீர் சொல்மாற்றம் செய்வது எனக்கு ஏற்றது இல்லை. Wikipedia மேற்கோளாக இருக்க வேண்டும், அதாவது அரசு நூல்களுடன் ஓரளவு சொல்லியைபு அமைவது என் கருத்து. திடீர் ரசப்பொடி உங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது, ஆனால் பலருக்கு இல்லை. கோயம்பேடு Service Centreஐ பழுதகம் என்கிறார்கள். இது தவறு. பெயர்ப் பலகையில் உள்ளது. அதை ஏற்பது நன்று என நம்புகிறேன். சொற்களை மாற்றுவது சரியல்ல என்பது என் கருத்து. பயிர்களின் பெயர்கள் நீங்கள் விரும்பு வதை போல் எத்தனை "காரணப் பெயர்கள்". பெரும்பாலு அவ்வாறு இல்லை. ஆண்டு ஆண்டாக பழைய சொற்களை எடுத்து புதிய சொற்கள் போடுகின்றனர். இதனால் யாருக்கு லாபம்? இன்றைக்கு "உகுந்த" சொல்லை கடாசிவிட்டு வேறு "உகுந்த" சொல் வரும். எனக்கு இது ஏற்றது அல்ல. ராஜ் (தொழில்நுட்பம்) - 8-4-2010

திடீர் நினைவகம்

[தொகு]

திடீர் நினைவகம் (flash memory) புழக்கத்தில் உள்ளவை :

  1. http://aariyathamizhan.blogspot.com/2010/01/blog-post.html
  2. http://tharavuthaal.50webs.com/norflash/S29GL064-032N.html


EEPROM பரிந்துரைகள்

[தொகு]

EEPROM - Electrically Erasable Programmable Read Only Memory

பரிந்துரைகள் :

  • மின்னழி நிரல் நினைவகம் .-
  • மின்முறையில் மாற்றவல்ல படிக்க மட்டுமே பயன்படும் நினைவகம் (மிமா பமப நினைவகம் ) -
  • மின்முறையில் மாற்றவல்ல (நிரல்மாற்றத்தக்க) படிக்க மட்டும் பயன்படும் நினைவகம் (மிமா பமப நினைவகம் ) -
  • மின்முறையில் நிரல்முற்றும் மாற்றவல்ல படிக்க மட்டும் பயன்படும் நினைவகம் (மிநிமா பமப நினைவகம்) -
  • மின்முறையில் அழித்தெழுத நிரலாக்கவல்ல படிக்க மட்டும் பயன்படு நினைவகம்
  • மின்வழி அழிவுறு நிரல்மாறு படித்தற்கு மட்டும் பயன்படு நினைவகம் (மி.அ.நி பமப )
  • மின்னழி நிரல்மாறு படித்தற்கு மட்டும் பயன்படு நினைவகம் (மிநி பமப நினைவகம்)

கருத்துகள்

[தொகு]

இக்கட்டுரையின் தலைப்பு விரைவில் மாற்றப் பட வேண்டும் . அனைவரும் தங்கள் கருத்துகளை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் -- இராஜ்குமார் 05:24, 12 ஏப்ரல் 2010 (UTC)

இதில் என் சிந்தனையில் எளிமையாகவும் , நன்கு பொருந்துவதாகவும் கடைசி தலைப்பு நன்றாக உள்ளதாக தெரிகிறது . மின்னழி நிரல்மாறு படித்தற்கு மட்டும் பயன்படு நினைவகம் (மிநி பமப நினைவகம்) . தலைப்பு பொருந்தல் பற்றிய கருத்துக்கள் வேண்டுகிறேன் . நன்றி . --இராஜ்குமார் 05:50, 12 ஏப்ரல் 2010 (UTC)

நிரல் என்பது தேவையற்றது. ஆங்கிலத்தில் programmable என்பது எழுதத்தக்க என்னும் பொருளில்தானே பயன்படுகின்றது? இன்னும் இரண்டொரு நாளில் கருத்துக்கூறுகின்றேன்..electrically erasable என்பதற்கு மின்னழி சரியே. எந்த நினைவகமும் படிக்கவல்லதாக இருக்க வேஎண்டும் :) எனவே மின்னழி எழுதவல்ல படிப்பு நினைவகம் என்பது EEPROM - Electrically Erasable Programmable Read Only Memory எனக்கொள்ளலாம். இங்கே எழுதவல்ல என்பது programmable என்னும் கருத்தைக் குறிப்பது. Read-Write என்பதைப் எழுதப்படிக்க எனக் குறிக்க்கலாம். நிரல் என்பது இங்கு சரியான சொல்லா என்பதே நான் மாற்றிக் கூறுவதற்குக் காரணம். நிரல் என்பது சுருக்கமான சொல். கட்டாயம் வேண்டும் என்றால் வைத்துக்கொள்ளலாம், தமிழில் தக்க விளக்கமும் கொடுக்க முடியும் (programming என்பதில் இருந்து மாறான பொருள் தர இயலும்). எழுதவல்ல நினைவகம் என்பதும், எழுதப்படிக்கும் நினைவகம் என்பதும் சற்று குழப்பம் ஏற்படுத்தலாம், ஆனால் அவை என்னவென்று புரியும் பொழுது அதன் பொருத்தமும் நுண் வேறுபாடும் புரியும். --செல்வா 16:09, 12 ஏப்ரல் 2010 (UTC)
மின்னழி நிரல்மாறு படித்தற்கு மட்டும் பயன்படு நினைவகம் (மிநி பமப நினைவகம்) . என்னும் தலைப்பும் சரியாக உள்ளது என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன்.--செல்வா 16:10, 12 ஏப்ரல் 2010 (UTC) மின்னழி எழுதவல்ல, படித்தற்கு மட்டும் பயன்படு நினைவகம் (மிழு பமப நினைவகம்) என்றும் கூறலாம். பழக்கத்தில் மிழு என்றாலே மின்னழி எழுதவல்ல என்னும் பொருள் சுட்டுமாறும் கொள்ளுமாறும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. --செல்வா 16:14, 12 ஏப்ரல் 2010 (UTC)

கண்டிப்பாக இவ்வாறு எழுதலாம் . நன்றாகவே உள்ளது . மின்னழி எழுதவல்ல, டித்தற்கு ட்டும் யன்படு நினைவகம் (மிழு பமப நினைவகம்) -- இராஜ்குமார் 11:50, 13 ஏப்ரல் 2010 (UTC)

மி.அ.நி பமப ; மிழு பமப போன்ற சுருக்கங்கள் தமிழ் பாடல்நூல்களில் பயனாகுவதில்லை. முழு விரிவாக்கமே சிறந்தது என நினைக்கிறேன். தமிழ் வழி பாடலநூல்களைப் பார்த்துவிட்டு இந்த "பமப " எழுத்து 'சுருக்கங்களை' பார்த்தால் மாணவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படும் என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் EEPROM என்பது செந்தபடுத்தப்பட்ட சொல். தமிழில் இவை அவ்வாறு இல்லை. சுருக்கத்திற்கு எழுத்துகளுக்கு மாறாக "மின்னழிநிரல் நினைவகம்" அல்லது வேறு சுருக்க சொற்கள் பயன்படுத்துதல் நன்று. தமிழ் நாடு அரசு சொற்களிலே எழுத்து சுருக்கங்கள் தவிர்க்கப்படுகின்றன. --தொழில்நுட்பம் 11:10, 14 ஏப்ரல் 2010 (UTC)

என்ன குழப்பம் வரும் . புரியவில்லை . ROM என்பதனை தமிழில் படித்தற்கு மட்டும் பயன்பாடு நினைவகம் என்று சொல்வதில் எந்த தவறை கண்டீர்கள் . பா.ம.க , சொல்கிற இளைஞர்கள் ப.ம.ப நினைவகம் சொல்ல மாட்டார்களா ? 'க' னா 'ரு' னா பழனியப்பன் என்று சொல்கிறார்கள் . பழ.நெடுமாறன் என்றும் சொல்கிறார்கள் . மு.க .ஸ்டாலின் , 'சு' னா 'ப' னா என்று கூறலாம் . எந்த மொழியில் இவ்வாறு உள்ளது . சுருக்கம் குழப்பம் வராது . நீங்கள் ஒரு முறை எந்த பாட நூலில் EEPROM என்பதை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லுங்கள் . அதை எவ்வாறு தமிழில் மொழிபெயர்த்திருகிறார்கள். அதனை முதலில் சொல்லுங்கள் . நீங்கள் ஒவ்வொரு முறையும் பாட நூல் , பாட நூல் என்று தான் சொல்கிறீர்கள் , ஆனால் எந்த பாட நூல் என்று சொல்ல வில்லை . நீங்கள் எந்த புத்தகம் , எந்த பதிப்பு , பக்கங்கள் என்ற குறிப்பை முதலில் தாருங்கள் . --இராஜ்குமார் 07:27, 16 ஏப்ரல் 2010 (UTC)

படித்தற்கு மட்டும் பயன்படு நினைவகம் என்பது "Read Only Memory" என்பதற்கான ஒரு விளக்கம்போல அமைந்துள்ளது. கலைச் சொற்கள் சுருக்கமாகவும் ஓரளவு விளக்கம் கொண்டவையாகவும் இருப்பதே சிறப்பு. ஒரு காலத்தில் Electrical Engineer என்பதை மின்சாரப் பொறியியல் நிபுணர் என்று நீளமான தொடரால் குறிப்பிட்டதுண்டு. அது, மின்சாரப் பொறியியலாளர், மின்சாரப் பொறியாளர், எனப் படிப்படியாகக் குறுகி இப்போது மின்பொறியாளர் என்று வந்துவிட்டது. கலைச்சொற்கள் கூடிய அளவு சுருக்கமாக அமைந்தால் தான் அது மொழியின் செயற்றிறனை மேம்படுத்தும். அண்ணா பல்கலைக் கழகத் வளர்தமிழ் மன்றத்தின் கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி, Read Only Memory என்பதற்கு வாசிப்பு நினைவகம் என்ற சொல்லைக் கொடுத்துள்ளது. மயூரநாதன் 09:03, 16 ஏப்ரல் 2010 (UTC)

இராஜ்குமார் அவர்களே

நூல்களில் ROM வாசிப்பு/படிப்பு நினைவகம் என தரப்பட்டுகிறது. EEPROM என்பதற்கு தமிழில் எழுத்துச் சுரக்கம் நான் பார்க்கவில்லை. ROMக்கு வாசிப்பு நினைவகம் முதற்கண்ணிலே புரியும் சொல். பமப அவ்வாறு இல்லை. மின்னழிநிரல் நினைவகம் இவ்வாறு மொழிபெயர்த்தேன் : மின் - மின்சாரம்; அழி - அழிப்பு - Erase; நிரல் - நிரல்படு - Programmable; Read Only (படிப்பு/வாசிப்பு) என்பது உட்கிடையானது (implied). காண்க http://www.textbooksonline.tn.nic.in/Books/11/Std11-CompSci-TM-1.pdf பக்கம் 68 (PDF 76); நீங்கள் சொல்லும் முழு விரிவு கலைச்சொல், இன்னும் சுருக்கமாக பயன்படுகிறது ஆனால் "ப ம ப" போல் சுருக்கங்கள் இல்லை. மயூரநாதன் அவர்கள் சொன்னது போல் சொற்களாக சுருக்குவது பிற இடங்களில் செய்யப்படுகிறன; இங்கும் அவ்வாறே நன்று என நினைக்கிறேன். --தொழில்நுட்பம் 12:57, 16 ஏப்ரல் 2010 (UTC)

திரு. ராஜேஷ் . நீங்கள் இவ்வாறு ப.ம.ப நினைவகம் என்பதற்கு பதில் தமிழ் பாட நூலில் உள்ள படி படிக்க மட்டும் நினைவகம் என்று பயன்படுத்துங்கள் என்று கூறினீர்கள் ஆயினால் . நான் நிச்சயம் ஏற்றுகொள்வேன் . ஆனால் நீங்கள் படிப்பு நினைவகம் என்று தான் சொல்கிறீர்கள் . படிப்பு நினைவகம் என்பது பொருந்தாது என்பது என் வாதம் . மேலும் EEPROM என்பதற்கு நீங்கள் கூறி உள்ளது மின்னழிநிரல் நினைவகம் . இதில் read only என்பதே இல்லை . அதனால் நான் நீங்கள் சொல்வதை ஏற்க வில்லை . ஆனால் செல்வா அவர்களின் பரிந்துரைப்படி எனது சிந்தனையையும் சேர்த்து பெயரிட்டதில் ஓரளவிற்கு பொருந்துவதாக இருந்தது . பாடங்களில் இருப்பதில் மின்சாரத்தால் என்பதை மட்டும் மின்னால் என்று மாற்றலாம் என்பது என் பரிந்துரை . மயூரநாதன் கூறியது போல் பின் அதனையும் சுரிக்க முயற்ச்சிப்போம் . ஆகையால் மேலே உள்ள பரிந்துரைகளுடன் , மின்னால் அழியும் நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் என்று பெயரிடலாம் என்று நான் நினைக்கிறேன் . --இராஜ்குமார் 13:22, 16 ஏப்ரல் 2010 (UTC)
  • மின்னால் அழியும் நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம்
  • மின்வழி அழியும் நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம்
  • மின்வழி அழித்து எழுதவல்ல படிக்க மட்டும் நினைவகம்
  • மின்னழி நிரலாக்கு படித்தற்கு மட்டும் நினைவகம் (மிநி பம நினைவகம்)
  • மின்னழி நிரல்மாறு படித்தற்கு மட்டும் நினைவகம் (மிநி பம நினைவகம்)

-- இராஜ்குமார் 13:28, 16 ஏப்ரல் 2010 (UTC)

வாசிப்பு நினைவகம்

[தொகு]

மயூரநாதன் இக்கருத்தை தந்தளித்தமைக்கு நன்றி . வாசிப்பு நினைவகம் என்பது பொருந்தாது என்றே நான் நினைகிறேன் . ஏனென்றால் செய்தி வாசிப்பவர் என்று நாம் கேட்டுரிகிறோம் அல்லவா ? இந்த வாசிப்பு என்பதற்கும் , படிப்பு என்பதற்கும் ஒரு சிறிய வேறுபாடு உள்ளதாகவே நான் கருதுகிறேன் . வாசிப்பு என்பது ஒரு மற்றவர்களுக்காக உரக்க உச்சரிப்பது என்று பொருள் . படிப்பு என்பது தனக்காக மட்டுமே உச்சரிப்பது . வாசிப்பு பிறரின் அறிதல் பலன் . படிப்பு தனது அறிதல் பலன் . இங்கு இவ்வகை நினைவகம் யார் அதனை உச்ச்சரிகிறார்களோ அவர் ஒருவரின் பலனாகவே இது அமைகிறது . ஆகையினால் வாசிப்பு நினைவகம் பொருந்தாது என்று கூற கடமைப்பட்டுள்ளேன் . நன்றி மயூரநாதன் . -- இராஜ்குமார் 13:44, 16 ஏப்ரல் 2010 (UTC)

ஐயா

இவை அனைத்தும் (குறிப்பாக முதல் இரண்டு) நன்று என நினைக்கிறேன். படிப்பு நினைவகம் அரசாங்க www.tamilvu.org/library/kalaichool/r/r_seriesPage2.html என்பவற்றில் மற்றும் பல இடங்களில் தரப்பட்டுள்ளது. இது மேலும் ஒரு சுருக்கம். கூறியுள்ளது போல் Read Only பொருள் உள்ளடங்கியுள்ளது. எனினும் நீங்கள் தரும் இச்சொற்கள் பயன்பாட்டிற்கு அருகாமையில் உள்ளது என நினைக்கிறேன். --தொழில்நுட்பம் 13:42, 16 ஏப்ரல் 2010 (UTC)