மின்னணுக்கற்றை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மின்னணுக்கற்றை அல்லது எதிர் முனைக் கதிர்கள் (Cathode ray) என்பது மின்னிறக்கக் குழாய்களில் எதிர்மின்முனையிலிருந்து நேர்மின்முனையினை நோக்கிப் பாயும் கதிர்களாகும். இக்கதிர்கள் எதிர்மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்களால் ஆனது. மேலும் இக்கதிர்கள் மின்புலத்தாலும் காந்தப்புலத்தாலும் விலக்கமுறுகின்றன. அயனாக்கும் பண்புடையன. உலோகத் தகட்டினால் தடைபடும் போது எக்சு கதிர்களை உமிழ்கின்றன. இவை நேர் கோட்டில் பயணிக்கின்றன. ஒளிர்திரையில் விழும்போது ஒளிர்கின்றன. எந்திர ஆற்றலுடையன. தாழ் அமுக்கத்தில் அடைக்கப்பட்ட வாயுவிற்கு உயர் மின்னழுத்த வேறுபாடு பிரயோகிக்கப்படும் போது கதோட்டிலிருந்து ஒரு வகையான கதிர்ப்புக்கள் வெளிச்செல்வது அவதானிக்கப்பட்டது. இது கதோட்டிலிருந்து வெளிப்படுவதால் இது கதோட் கதிர் எனப்படுகிறது. தாழ் அமுக்கமாக 0.01atm பயன்படுத்தப்படும். உயர் மின்னழுத்த வேறுபாடு அண்ணளவாக 11000v பயன்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னணுக்கற்றை&oldid=1866955" இருந்து மீள்விக்கப்பட்டது