எதிர்முனைக் கதிர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எதிர் முனைக் கதிர்கள் அல்லது மின்னணுக்கற்றை (Cathode ray) என்பது மின்னிறக்கக் குழாய்களில் எதிர்மின்முனையிலிருந்து நேர்மின்முனையினை நோக்கிப் பாயும் கதிர்களாகும். இக்கதிர்கள் எதிர்மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்களால் ஆனது. மேலும் இக்கதிர்கள் மின்புலத்தாலும் காந்தப்புலத்தாலும் விலக்கமுறுகின்றன. அயனாக்கும் பண்புடையன. உலோகத் தகட்டினால் தடைபடும் போது எக்சு கதிர்களை உமிழ்கின்றன. இவை நேர் கோட்டில் பயணிக்கின்றன. இதனால் அவைகள் தங்கள் பாதையிலுள்ள பொருட்களின் நிழலைத் தோற்றுவிக்கின்றன. ஒளிர்திரையில் விழும்போது ஒளிர்கின்றன. எந்திர ஆற்றலுடையன. தாழ் அமுக்கத்தில் அடைக்கப்பட்ட வாயுவிற்கு உயர் மின்னழுத்த வேறுபாடு பிரயோகிக்கப்படும் போது எதிர்மின்முனையிலிருந்து ஒரு வகையான கதிர்கள் வெளிச்செல்வது அவதானிக்கப்பட்டது. இது எதிர்மின்முனையிலிருந்து வெளிப்படுவதால் இது எதிர் முனைக் கதிர்கள் எனப்படுகிறது. தாழ் அமுக்கமாக 0.01atm பயன்படுத்தப்படும். உயர் மின்னழுத்த வேறுபாடு அண்ணளவாக 11000v பயன்படும். இக்கதிர்கள் அதிக அணுநிறைக் கொண்ட பொருட்களால் தடைபடும் போது எக்சு-கதிர்களைத் தோற்றுவிக்கின்றன.

ஆதாரம்[தொகு]

  • A dictionary of science----ELBS