மின்கருவி
Jump to navigation
Jump to search
மின்கருவி என்பது மின்னாற்றலால் இயங்கும் கருவி. மின்னாற்றலை பலவாறாக மிக நுணுக்கமாக பயன்படுத்தும் துறை எதிர்மின்னியியல் (எலக்ட்ரானிக்ஸ் அல்லது இலத்திரனியல்) துறை. இத்துறையின் தொழில்நுட்பத்தால் தொலைபேசி, தொலைக்காட்சி, ஒலிமிகைப்பி, வானூர்திக் கட்டுப்பாட்டுக் கருவிகள், குறுந்தட்டு இயக்கிகள், ஒலி, ஒளிப் பதிவிகள், ஒளிப்படக் கருவிகள், காலங்காட்டுங் கருவிகள், பல்வேறு வகையான அளவீட்டுக்கருவிகள் என்று ஏராளமான கருவிகள் இயங்குகின்றன. இவையன்றி அதிக மின்னாற்றலைப் பயன்படுத்தும் மின் விசிறிகள், மின்மாற்றிகள், மின்னாக்கிகள், தொழிலக மின்வெப்ப உலைகள் போன்றவையும் மின்கருவிகள்தாம்.