மிசுட்டி பெந்த்சு
மிசுட்டி சி. பெந்த்சு (Misty C. Bentz) (பிறப்பு: 1980, ஜூலை, 4,) ஓர் அமெரிக்க வனியற்பியலாளர் ஆவார். இவர் ஜார்ஜியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் துறையில் இணைப்பேராசிரியராக உள்ளார். இவர் மீப்பொருண்மைக் கருந்துளையின் பொருண்மை அளவீடுகளுக்காகவும் கருந்துளை அளவுசார் உறவு வகைகளுக்காகவும் பெயர்பெற்றவர்.
வாழ்க்கைப்பணி
[தொகு]இவர் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் வானியலிலும் இளவல் பட்டம் பெற்றார். இவர் 2007 இல் ஓகியோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டத்தை பெற்றார்.[1] இவர்2007 முதல் 2009 வரை முதுமுனைவர் ஆய்வாளராகவும் நாசாவின் ஆய்வுறுப்பினராக [2] 2009 முதல் 2010 வரையில் இர்வினில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் இருந்தார். இவர் 2010 இல் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் துறையில் சேர்ந்தார்]].
ஆராய்ச்சி
[தொகு]இவர் செயல்முனைவு மிக்க மீப்பொருண்மைப் பால்வெளிக்கருக்களின் பொருண்மைகளை எதிர்முழக்க வரைவு முறையால் தீர்மானிக்கும் ஆய்வுக்காகப் பரவலாக அறியப்பட்டுள்ளார்.[3][4][5][6] இவர் இப்போது 60 செயல்முனைவு மிக்க பால்வெளிகளின் SMBHபொருண்மை அளவீடுகளைத் தரும் AGN கருந்துளைப் பொருண்மைத் தரவுத்தளத்தை பேணி வருகிறார்.[7]> SMBH பொருண்மை அளவீடுகளைப் பயன்படுத்தி, பல கருந்துளைகளின் பருமை இயல்புகளை அளவீடு செய்ய உதவியுள்ளார். இந்த அளவீட்டில் கருந்துளை பொருண்மை முதல் பால்வெளி பால்வெளி உடுக்கணப் பொருண்மை,[8] அகல்வரி வட்டார ஆரம், AGN ஒளிர்திறன் ஆகியன அடங்கும்.[9][10] இந்தப் பருமை உறவுகளின் அளவீடு, கருந்துளைப் பொருண்மை மதிப்பீடுகளின் பேரளவு புள்ளியியல் பதக்கூறுகளாகப் பதிவுசெய்யப்படுகின்றன. இவை பால்வெளி உருவாக்கத்தையும் படிமலர்ச்சியையும் ஆய்வு செய்ய உதவும் உயர்பிரிதிற பாய்மவியங்கியல் பெருநிலை அண்டப் படிமங்களுக்கான (ஒப்புருவாக்கங்கள்) நோக்கீட்டுக் கட்டுத்தளைகளை விதிக்கின்றன, எ. கா. விளக்கமுறை அண்டம்,[11] தொடுவான -AGN படிமங்கள் போன்றன.[12]
நாசாவின் வானியற்பியல்லுக்கான அடுத்த 30 ஆண்டுகளுக்கான வழித்தடத்தை அட்டவணைப்படுத்த 2013 இல் தேர்ந்தெடுக்கபட்ட 22 வானியலாளர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[13] வானியல் பொம்மைகள் சார்ந்த நான்காம் பதிப்புக்கு இவர் தொழில்நுட்பப் பதிப்பாசிரியராக இருந்துள்ளார்s.[14] Popular Science, Business Insider, Live Science, and Mashable போன்ற மக்கள் பரப்புரை ஊடகங்கள் கருந்துளை சார்ந்த உரைகளில் இவரது பெயரைத் தொடர்ந்து சான்று காட்டி வருகின்றன.[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ph.D. Degree Alumni | Department of Astronomy". astronomy.osu.edu. Retrieved 2019-08-22.
- ↑ "2017 and Prior Fellows". STScI (in ஆங்கிலம்). Retrieved 2019-08-22.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Bentz, Misty C. (10 November 2006). "A Reverberation-based Mass for the Central Black Hole in NGC 4151" (in en). The Astrophysical Journal 651 (2): 775–781. doi:10.1086/507417. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. https://archive.org/details/sim_astrophysical-journal_2006-11-10_651_2/page/775.
- ↑ Bentz, Misty C.; Walsh, Jonelle L.; Barth, Aaron J.; Baliber, Nairn; Bennert, Vardha Nicola; Canalizo, Gabriela; Filippenko, Alexei V.; Ganeshalingam, Mohan et al. (8 October 2009). "THE LICK AGN MONITORING PROJECT: BROAD-LINE REGION RADII AND BLACK HOLE MASSES FROM REVERBERATION MAPPING OF H$\upbeta$" (in en). The Astrophysical Journal 705 (1): 199–217. doi:10.1088/0004-637X/705/1/199. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X.
- ↑ Bentz, Misty C.; Walsh, Jonelle L.; Barth, Aaron J.; Yoshii, Yuzuru; Woo, Jong-Hak; Wang, Xiaofeng; Treu, Tommaso; Thornton, Carol E. et al. (26 May 2010). "The Lick Agn Monitoring Project: Reverberation Mapping of Optical Hydrogen and Helium Recombination Lines" (in en). The Astrophysical Journal 716 (2): 993–1011. doi:10.1088/0004-637X/716/2/993. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X.
- ↑ Bentz, Misty C.; Cackett, Edward M.; Crenshaw, D. Michael; Horne, Keith; Street, Rachel; Ou-Yang, Benjamin (18 October 2016). "A Reverberation-Based Black Hole Mass for MCG-06-30-15" (in en). The Astrophysical Journal 830 (2): 136. doi:10.3847/0004-637X/830/2/136. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X.
- ↑ Katz, Sarah; Bentz, Misty C. (2015). "The AGN Black Hole Mass Database" (in en). Publications of the Astronomical Society of the Pacific 127 (947): 67. doi:10.1086/679601. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-3873.
- ↑ Bentz, Misty C.; Manne-Nicholas, Emily (2018-09-11). "Black Hole–Galaxy Scaling Relationships for Active Galactic Nuclei with Reverberation Masses". The Astrophysical Journal 864 (2): 146. doi:10.3847/1538-4357/aad808. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-4357.
- ↑ Bentz, Misty C.; Peterson, Bradley M.; Netzer, Hagai; Pogge, Richard W.; Vestergaard, Marianne (April 2009). "THE RADIUS-LUMINOSITY RELATIONSHIP FOR ACTIVE GALACTIC NUCLEI: THE EFFECT OF HOST-GALAXY STARLIGHT ON LUMINOSITY MEASUREMENTS. II. THE FULL SAMPLE OF REVERBERATION-MAPPED AGNs" (in en). The Astrophysical Journal 697 (1): 160–181. doi:10.1088/0004-637X/697/1/160. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X.
- ↑ Bentz, Misty C.; Denney, Kelly D.; Grier, Catherine J.; Barth, Aaron J.; Peterson, Bradley M.; Vestergaard, Marianne; Bennert, Vardha N.; Canalizo, Gabriela et al. (April 2013). "The Low-Luminosity End of the Radius-Luminosity Relationship for Active Galactic Nuclei" (in en). The Astrophysical Journal 767 (2): 149. doi:10.1088/0004-637X/767/2/149. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X.
- ↑ Mutlu-Pakdil, Burçin; Seigar, Marc S.; Hewitt, Ian B.; Treuthardt, Patrick; Berrier, Joel C.; Koval, Lauren E. (14 November 2017). "The Illustris simulation: supermassive black hole–galaxy connection beyond the bulge" (in en). Monthly Notices of the Royal Astronomical Society 474 (2): 2594–2606. doi:10.1093/mnras/stx2935. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711. https://academic.oup.com/mnras/article/474/2/2594/4628069.
- ↑ Volonteri, M.; Dubois, Y.; Pichon, C.; Devriendt, J. (12 May 2016). "The cosmic evolution of massive black holes in the Horizon-AGN simulation" (in en). Monthly Notices of the Royal Astronomical Society 460 (3): 2979–2996. doi:10.1093/mnras/stw1123. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711. https://academic.oup.com/mnras/article/460/3/2979/2609412.
- ↑ "Astrophysics Roadmap | Science Mission Directorate". science.nasa.gov. Retrieved 2019-07-12.
- ↑ Maran, Stephen P. (2017). Astronomy for Dummies (4th ed.). Wiley. ISBN 978-1-119-37438-1.
- ↑
மக்கள் அறிவியல் கட்டுரைகள்
[தொகு]- "Does a black hole ever die?". Popular Science (in ஆங்கிலம்). Retrieved 2019-07-12.
- Mosher, Dave. "A 'mind-boggling' telescope observation has revealed the point of no return for our galaxy's monster black hole". Business Insider. Retrieved 2019-07-12.
- Mosher, Dave. "'Like looking at the gates of Hell': Astronomers just revealed the first picture of a black hole, and it's a monster". Business Insider. Retrieved 2019-07-12.
- Baker, Sinéad. "Scientists just released the first-ever photograph of a black hole. Some people think it looks like a 'smudge on the lens.'". Business Insider. Retrieved 2019-07-12.
- Mosher, Dave. "The first-ever picture of a black hole is fuzzy. These incredible illustrations help explain what it shows". Business Insider. Retrieved 2019-07-12.
- Mosher, Dave. "The first 'groundbreaking' pictures of a black hole may be unveiled on Wednesday. Here's what scientists think those images will look like". Business Insider. Retrieved 2019-07-12.
- Kaufman, Mark. "What's actually going on in that cryptic black hole photo?". Mashable (in ஆங்கிலம்). Retrieved 2019-07-12.
- Letzter, Rafi (2019-06-14). "Is This Invisible Magnetic Field Smothering Our Nearest Supermassive Black Hole?". Live Science. Retrieved 2019-07-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- Homepage at Georgia State University
- Scientific publications of Misty C. Bentz on the NASA Astrophysics Data System
- மிசுட்டி பெந்த்சு publications indexed by Google Scholar