உள்ளடக்கத்துக்குச் செல்

மா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியட்நாமின் தான் ஹோ நகரில் உள்ள மா  ஆறு 
மா ஆறு

மா ஆறு (Ma River) ஆசியாவில் வடகிழக்கு வியட்நாமில் உற்பத்தியாகும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆறு வியட்நாம் மற்றும் லாவோஸில் 400 கி.மீ தொலைவுக்குஓடி பின்னர் மீண்டும் வியட்நாமுக்குள் புகுந்து டோன்கின் வளைகுடாவில் கடலில் கலக்கிறது.

மா ஆற்றின் மிகப்பெரிய துணை ஆறுகளாக சூ ஆறு, புவாய் ஆறு மற்றும் காவ் சாய் ஆறு ஆகியவை விளங்குகின்றன. வட மத்திய வியட்நாமில் தான்ஹோ மாகாணத்தில் இந்த அனைத்து ஆறுகளும் மா ஆற்றுடன் சங்கமிக்கின்றன.

மா ஆறு மா ஆற்றுச் சமவெளிப் (தான்ஹோ சமவெளி) பகுதியை உருவாக்கியுள்ளது. இச்சமவெளி வியட்நாமின் மூன்றாவது பெரிய சமவெளிப்பகுதியாகும். 

மா ஆற்றுச் சமவெளியானது வியட்நாமின் தெற்குப்புற எல்லையாக அமைகிறது. இது கி.மு இரண்டாம் நுாற்றாண்டில் நான்யுயே என்பாரின் ஆட்சிக்காலத்தில் அமைந்த இரு மாகாணங்களான கு-சானின் மையமாக அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Taylor, Keith Weller, "The Birth of Vietnam". University of California Press, 1983. p. 26
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா_ஆறு&oldid=3957337" இலிருந்து மீள்விக்கப்பட்டது