மா. ஓ. பா. ஐயங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மா. ஓ. பா. ஐயங்கார்
M.O.P. Iyengar
பிறப்பு15 திசம்பர் 1886
இறப்பு10 திசம்பர் 1963
தேசியம்இந்தியர்
துறைபாசியியல் (ஆல்கா)
பணியிடங்கள்மாநிலக் கல்லூரி, சென்னை
அறியப்படுவதுபாசியியல் ஆய்வு முன்னோடி

மாந்தையம் ஓசூரி பார்த்தசாரதி ஐயங்கார் (Mandayam Osuri Parthasarathy Iyengar)(15 திசம்பர் 1886 - 10 திசம்பர் 1963) அல்கா அமைப்பு, உயிரணுவியல், இனப்பெருக்கம் மற்றும் வகைப்பாட்டியல் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்த முக்கிய இந்திய தாவரவியலாளர் மற்றும் பாசியியல் நிபுணர் ஆவார். இவர் "இந்திய பாசியியலின் தந்தை" அல்லது "இந்தியாவில் அல்காலஜியின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் பாசியியல் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். இவர் முதன்மையாக வால்வோக்களில் ஆய்வு மேற்கொண்டார்.

ம. ஓ. பா. ஐயங்கார் 1925-ல், முதல் வரிசை, இடமிருந்து மூன்றாவது

இளமை[தொகு]

ஐயங்கார் சென்னையில் பிறந்தார். இங்கு இவரது தந்தை ம. ஓ. அழசிங்கராச்சாரியார் ஒரு வழக்கறிஞராக பணியாற்றினார். இவரது குடும்பம், பணக்கார குடும்பம் வாழ்க்கையின் பல துறைகளில் சாதனைகளுக்குப் பெயர் பெற்றது. இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, இவர் மாநிலக் கல்லூரியில் படித்தார். 1906-ல் இளங்கலைப் பட்டமும், 1909-ல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

ஆசிரியப் பணி[தொகு]

முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளராகவும், 1911-ல் ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் ஆனார். பின்னர் 1920-ல் மாநிலக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியரானார். வழக்கமான கற்பித்தலைத் தவிரப் பாசிகளில் ஆய்வு மேற்கொண்டார் இவர் இங்கிலாந்தில் 1930-ல் இராணி மேரி கல்லூரியில் பேராசிரியர் எப். ஈ. பிரிட்சிச்சுடன் இணைந்து பணியாற்றினார். இங்கு இவர் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2]

பெருமை[தொகு]

ஐயங்கரியா [3] (பங்க்டேரியேசி), ஐயங்கரினா (டெமடியேசி), ஐயங்கரியல்லா (ஸ்டிகோனெமடேசி) மற்றும் பார்த்தசாரதியெல்லா (ஸ்டிகோனெமடேசியே) உட்படப் பல உயிரலகுகளுக்கு இவரது பெயரிடப்பட்டுள்ளன. ஐயங்கார் ஒரு சுறுசுறுப்பான விளையாட்டு வீரர் மற்றும் நீச்சல் வீரர் ஆவார். 1925-ல் பாம்பனில் மூழ்கிய இரண்டு மாணவர்களைக் காப்பாற்றினார். இவர் சென்னையில் பில்லியர்ட்சு வாகையாளராகவும் இருந்தார்.

இறப்பு[தொகு]

ஐயங்கார் பெருமூளை இரத்த உறைவு நோயால் 10 திசம்பர் 1963-ல் இறந்தார்.[4][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Subrahmanyan, R. (1963). "Professor M.O.P. Iyengar". Journal of the Marine Biological Association of India 5 (2): 311–314. http://mbai.org.in/uploads1/manuscripts/Article%2019%20(311-314)2025404837.pdf. 
  2. Desikachary, T. V. (2004). "M O P Iyengar (1886–1963)" (in en). Journal of Biosciences 29 (3): 225–230. doi:10.1007/BF02702604. பன்னாட்டுத் தர தொடர் எண்:0250-5991. பப்மெட்:15381843. https://www.ias.ac.in/article/fulltext/jbsc/029/03/0225-0230. 
  3. 3.0 3.1 Desikachary, T. V. (1964). "M. O. P. Iyengar (1886–1963)". Phycologia 4 (1): 54–61. doi:10.2216/i0031-8884-4-1-54.1. பப்மெட்:15381843. 
  4. Maheshwari, P. (1964). "Prof. M. O. P. Iyengar". Nature 202 (4928): 132–133. doi:10.1038/202132b0. Bibcode: 1964Natur.202..132M. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._ஓ._பா._ஐயங்கார்&oldid=3816922" இலிருந்து மீள்விக்கப்பட்டது