மாஸ்கோ பல்கலைக்கழக விலங்கியல் அருங்காட்சியகம்
Appearance
Zoological Museum of Moscow University | |
அருங்காட்சியக கட்டிடம் (1902-ல் கட்டப்பட்டது) | |
நிறுவப்பட்டது | 1791[1] |
---|---|
அமைவிடம் | மாஸ்கோ |
ஆள்கூற்று | 55°45′20″N 37°36′35″E / 55.75556°N 37.60972°E |
வலைத்தளம் | Official Site |
மாஸ்கோ பல்கலைக்கழக விலங்கியல் அருங்காட்சியகம் (Zoological Museum of Moscow University) உருசியாவின் இரண்டாவது மிகப்பெரிய விலங்கியல் அருங்காட்சியகம் (பெரியது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள விலங்கியல் அருங்காட்சியகம்) ஆகும். இது உலகின் பன்னிரண்டு பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.
இந்த அருங்காட்சியகம் 1791-ல் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது. தற்போதைய கட்டிடம் 1898-1902-ல் கட்டப்பட்டது. மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை 1930-ல் நிறுவப்பட்டது. பின்னர் இத்துறையின் ஒரு பகுதியாக இந்த அருங்காட்சியகம் ஒரு வருடத்திற்குப் பின் பல்கலைக்கழகத்தின் பகுதியாக மாறியது. மீண்டும் தன்னாட்சி பெற்றது. பின்னர் 1930களின் இறுதியில் பல்கலைக்கழகத்தின் பகுதியாக மாறியது. 1991-ல் இது ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக மாறியது.
படங்கள்
[தொகு]-
நுழைவாயில்
-
கீழ்த்தளம்
-
ஆசிய யானை சட்டகத்துடன் கூடிய ஒப்புமை உடற்கூற்றியல் பகுதி
-
மேல் தளம்