மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குமுளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சி மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அருகில் பல்லபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமாகும். தேசிய கல்விக்கொள்கையின் வழிகாட்டல்களின்படி (NPE), மத்திய அரசின் நிதியுதவியுடன் கல்வித்துறையில், ஆசிரிய கல்வியின் மறுசீரமைப்பிற்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டன.அவ்வகையில் தமிழ்நாட்டில், திருச்சி மாவட்டத்தில் 1999-2000-ஆம் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது.

அமைப்பு[தொகு]

திருச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 45 கி.மீ துாரத்தில் லால்குடியிலிருந்து வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

ஏழு கிளைகள்[தொகு]

  1. பணிமுன் பயிற்சி
  2. பணியிடைப் பயிற்சி
  3. பணிஅனுபவக் கல்வி
  4. மாவட்ட வள அலகு
  5. திட்டமிடலும் மேலாண்மையும்
  6. கலைத்திட்டம் பாடப்பொருள் உருவாக்கம், மதிப்பிடுதல்
  7. கல்வி நுட்பவியல்

ஏழு கிளைகளின் செயல்பாடுகள்[தொகு]

பணிமுன் பயிற்சி பிரிவு[தொகு]

  • ஆசிரியர் கல்வியை அளித்தல், அதாவது மேனிலைக்கல்வியில் (பனிரெண்டாம் வகுப்பு) தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து இரண்டாண்டுக் கல்வியாக வழங்கப்படுகிறது. இவர்கள் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதியைப் பெறுவர்.[1]
  • கற்போரை மையமாகக் கொண்ட கல்வியையும், ஆளுமை வளர்ச்சிக்கான கல்வியையும் நன்னெறி பண்பாட்டுக் கல்வியையும் கற்றல் பொருள் துணைக்கருவிகள் தயாரித்தலையும் பயன்படுத்தலையும் ஆராய்ச்சி வாயிலாக பரப்புதல்.
  • கற்பிக்கும் முறைகளைக் கவனித்தல்.
  • உளவியலகறிவுரையும் வழிகாட்டலும்.

பணியிடை பயிற்சி பிரிவு[தொகு]

  • மாவட்டம் முழுமையிலுமுள்ள தொடக்கக்கல்வி, உயர்நிலை, மேல்நிலை கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கருத்தாளர்கள் ஆகியவர்களுக்குத் திட்டமிட்டுப் பணியிடைப் பயிற்சி அளித்தல்[2][3].
  • புதுமைபுனைதல், தொடர் ஆராய்ச்சிக்கு இணைப்பு மையமாகத் திகழ்தல், பருவ இதழ்கள், செய்தி மடல் வெளியிடல்.

மாவட்ட வள அலகு பிரிவு[தொகு]

  • பயிற்சி நிறுவனத்திற்கு வெளியே மாவட்டம் முழுமைக்கும் நடைபெறும் முறைசாராக் கல்வி, முதியோர் கல்வி|முதியோர் கல்விக்காக திட்டமிடுதல், இணைப்பாளராக இருத்தல்.
  • ஊக்குநர், கருத்தாளர், மேற்பார்வையாளர் ஆகியோருக்குப் பயிற்சி அளித்தல்.

திட்டமிடல், மேலாண்மைப் பிரிவு[தொகு]

  • பல்வேறு மாவட்டத் திட்டங்களுக்கு ஏற்ப புள்ளிவிவர அடிப்படையில் விவரங்களைத் திரட்டி பாதுகாத்தல்.
  • கல்வி திட்டமிடுவோர், நிர்வாகம் செய்வோர்களுக்குத் தேவையான பள்ளிச்சேர்க்கை, பள்ளியை விட்டு நின்றுவிடல், வயது வந்தோர் கல்வி, பெண்கல்வி, தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையோர், ஊனமுற்றோர், இடையூறுகள், கல்வி நிலையங்களை மதிப்பிடுவதற்கரிய உத்திகள், போன்றவற்றுக்குத் தேவையான திட்டங்களை வழங்குதல்.
  • பள்ளிப் பாடங்களை உருவாக்கல், நுண்ணிலைத்திட்டமிடுதல், பள்ளி ஒருங்கிணைப்பு உருவாக்கல் போன்றவற்றில் கல்வி அதிகாரிகளுக்கு உதவி செய்தல்.

பணிப் பட்டறிவுப் பிரிவு[தொகு]

  • வேலைசார் பட்டறிவுக் கல்விக்கு ஏற்ப உள்ளுர் துறைகளைத் தேர்ந்தெடுத்தல், கலைத்திட்ட அலகுகளை வளர்த்தல், கற்றல் கற்பித்தல் பொருட்கள், மலிவு விலை துணைக்கருவிகள், மதிப்பீட்டுக் கருவிகள் போன்றவற்றை ஆயத்தம் செய்தல்.
  • பயிற்சி நிறுவன எல்லைக்குள் உள்ள விடுதிகள், விளையாடும் இடம், சாலை, தோட்டம், சுற்றுப்புறத் தளவாடப் பொருட்கள் ஆகியவற்றின் துாய்மையைப் பேணுவதற்கான செயல்களை வகுத்தல்.

கல்வி நுட்பவியல் பிரிவு[தொகு]

  • பயிற்சி நிறுவனத்திற்கு மற்ற பிரிவுகளில் பணிபுரிவோர், கருத்தாளர்களின் ஒத்துழைப்புடன் எளிய, பயன்மிகு மலிவு விலை துணைக்கருவிகளைப் பல்வேறு பாடங்களுக்கும், தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்விக்கும், விளக்கப்படங்கள், மாதிரிகள், வரைபடங்கள், பதிவுநாடா, பாடல்கள், நழுவங்கள் போன்றவற்றை ஆயத்தம் செய்தல்.
  • மலிவு விலை துணைக்கருவிகள் தயாரிப்பதற்கான பணிப்பட்டறை நடத்துதல்.
  • கல்வி தொழில்நுட்பத்தைக் கல்வி செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்குப் பணியிடைப்பயிற்சி நடத்துதல்.
  • நிறுவனக் காட்சி, கேள்விக் கருவிகளைப் பாதுகாத்தல்.

கலைத்திட்டம், கற்றல் பொருள் உருவாக்கம் மற்றும் மதிப்பிடுதல் பிரிவு[தொகு]

  • உள்ளுர்ச் சூழ்நிலைக்கேற்ப தொடக்கக் கல்விக்கும், ஆசிரியர்களுக்கான திட்டங்களுக்கும், நடைமுறையில் உள்ளவற்றுக்கு புதியவற்றைக் கண்டுபிடித்து வளர்த்தல், கலைத்திட்டத்திற்கு துணைபுரியும் துணைநுால்களை தயாரித்தல்.
  • தேர்வு வினா வங்கி, தர அளவீடு, உற்றுநோக்குதல், குறை கண்டுணரும் தேர்வு, குறை நீக்கக் கற்பித்தல், திறன்மிகு மாணவர்களைக் கண்டுபிடித்தல் போன்றவைகளுக்கு வழிகாட்டும் குறிப்புகளை அளித்தல் (பணிப்பட்டறை வழி) பணியிடைப் பயிற்சி அளித்தல்.

பணியிடங்கள்[தொகு]

கல்வியாளர்கள்[தொகு]

  • முதல்வர் - 1
  • முதுநிலை விரிவுரையாளர் - 7
  • விரிவுரையாளர் - 17

அலுவலகப் பணியாளர்கள்[தொகு]

  • கண்காணிப்பாளர் - 1
  • உதவியாளர்கள் - 3
  • இளநிலை உதவியாளர்கள் - 5
  • சுருக்கெழுத்துத் தட்டச்சர் - 1
  • தட்டச்சர் - 2
  • ஆய்வக உதவியாளர் - 1
  • நூலக உதவியாளர் - 1
  • அலுவலக உதவியாளர் - 6

மாணவ - மாணவிகளின் சேர்க்கை எண்ணிக்கை[தொகு]

  • முதலாமாண்டு - 100
  • இரண்டாமாண்டு - 100

நிறுவனத்தின் சிறப்புக் கூறுகள்[தொகு]

  • கல்விச் செயற்கைகோள் ஒலிபரப்பு
  • மண்டல மெய்நிகர் வகுப்பு ஒருங்கிணைப்பு மையம் ( திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள்)
  • கணினி வழி கற்றல், கற்பித்தல் வகுப்பறை.
  • தடங்கலற்ற மின்வழங்கல்

முதன்மை இடங்கள்[தொகு]

  • அரசு வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், குமுளூர்.
  • அரசு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம், குமுளூர்.
  • அரசு வேளாண்மைப் பட்டயப் பயிற்சி கல்லூரி, குமுளூர்
  • அரசு கலை, அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் உறுப்பு கல்லூரி), குமுளூர்.
  • மூலிகைப் பண்ணை, பெருவளப்பூர்.
  • இலால்குடி - பாடாலூர் தேசிய நெடுஞ்சாலை-45 இணைப்பு சாலை.
  • காட்டூர் சர்க்கரை ஆலை

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-20.
  2. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=494806&cat=504
  3. http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2016/sep/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2565314.html?pm=366

உசாத்துணை[தொகு]