உள்ளடக்கத்துக்குச் செல்

மாலதி ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலதி ராவ்
பிறப்புபெங்களூரு,[1] கருநாடகம், இந்தியா
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியன்
வகைபுனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்திசாடர்லி விமன்
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது

மாலதி ராவ் ( கன்னடம்: ಮಾಲತಿ ರಾವ್ ) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் 2007 ஆம் ஆண்டு ஆங்கிலப் புதினமான திசாடர்லி விமன் க்காக சாகித்ய அகாதமி விருதை வென்றார்.[2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி.

[தொகு]

மாலதி ராவ் (ஏப்ரல் 1930) கர்நாடகாவின் பெங்களூரில் சென்னகிரி பத்மநாப ராவ் மற்றும் ஸ்ரீமதி. பத்மாவதி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். ஐந்து பெண் குழந்தைகளில் இவர் மூத்தவராவார். இருக்கு ஒரு மூத்த சகோதரர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர். இளம் பெண்ணாக இருந்தபோது,ஜேன் ஆசுடன், பிரான்டே சகோதரிகள் மற்றும் லூயிசா மே அல்காட் ஆகியோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார் மற்றும் பெங்களூரு மற்றும் மைசூர் பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கியத்தைத் தொடர்ந்தார். தனது பெண் கதை மாந்தர்களை கல்வி கற்ற, சுதந்திரமான வேலை செய்யும் பெண்ணாக உருவகப்படுத்தினார். பெங்களூரில் உள்ள விஜயா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகவும், பழம்பெரும் பேராசிரியர் வி.டி. சீனிவாசன் கல்லூரியின் முதல்வராகவும் துறைத் தலைவராகவும் இருந்தார். ராவ் தனது ஆசிரியர் பணியின் பெரும் பகுதியை டெல்லியில் கழித்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுசில் ஆங்கில இலக்கியம் கற்பித்தார்.

படைப்புகள்

[தொகு]

மாலதி ராவ் மூன்று புதினங்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் பல செய்தித்தாள் கட்டுரைகளை எழுதியுள்ளார். [3] "தி பிரிட்சு", " அண்டு இன் தெ பெனாரசு புளோவ்சு தெ கங்கா" மற்றும் "கம் பார் எ காபி ... பிளீசு" ஆகியன இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகளாகும்.[4]

2007 இல் வெளியிடப்பட்ட இவரது புதினமான 'திசார்டலி விமன்' மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். இந்தக் கதை விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் இருந்த நான்கு பெண்கள் சமூக அடிமைக் கட்டமைப்பில் இருந்து வெளியேறியதனை அடிப்படையாகக் கொண்டது.இதற்காக இவர் குடியரசுத் தலைவரிடமிருந்து கௌரவ சாகித்ய அகாதமி விருதை வென்றார்.

படைப்புகள்

[தொகு]
  • தி பிரிட்சு (புதினம்), சாணக்யா பதிப்பகம் (தில்லி, இந்தியா), 1990
  • திசார்டலி விமன் (புதினம்), துரோன்குவில் பதிப்பகம் (பெங்களூர், இந்தியா), 2005
  • மூன்று சிறுகதைத் தொகுப்புகள்
  • இன்குவிசிசன் [5]

விருதுகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Article Title[usurped!]
  2. "சாகித்திய அகாதமி விருதுகள்". Archived from the original on 2009-03-31. Retrieved 2023-10-28.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  3. "malathi rao's short stories".
  4. "மாலதி ராவின் படைப்புகள்".
  5. "The Hindu : Karnataka / Bangalore News : Telling a local tale in a global tongue". Archived from the original on 6 ஜூன் 2011. Retrieved 15 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Awards & fellowships-Akademi Awards".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_ராவ்&oldid=4109077" இலிருந்து மீள்விக்கப்பட்டது