மார்க் ஹென்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க் ஜெரோல்ட் ஹென்றி [1] Mark Jerrold Henry (பிறப்பு ஜூன் 12, 1971) ஒரு அமெரிக்க , ஒலிம்பிக் பளுதூக்குபவர், வலிமையானவர் மற்றும் ஓய்வுபெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார், இவர்தற்போது லெஜண்ட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் கையெழுத்திட்டார். இவர்ஒரு பின்னேற்புக் குழு தயாரிப்பாளராக வேலை செய்கிறார்.இவர்இரண்டு முறை ஒலிம்பியன் பட்டங்களும் ( 1992 மற்றும் 1996 ) [2] மற்றும் 1995 ஆம் ஆண்டில் நடைபெற்ற பான் அமெரிக்கன் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் போன்ற பதக்கங்களையும் வென்றுள்ளார்.[3] 1995 மற்றும் 1997 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இவர் அமெரிக்க தேசிய வாகையாளர் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

பளுதூக்குதலில்,1993, 1994, 1999 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஹென்றி அமெரிக்க தேசிய பளுதூக்குதல் வாகையாளர் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.அதில் ஒரு முறை அமெரிக்க ஓபன் வாகையாளராகவும், இரண்டு முறைகள் அமெரிக்க ஒலிம்பிக் விழா வாகையாளராகவும் பட்டம் பெற்றார்.[4] 1996 ஆம் ஆண்டில் NACAC வாகையாளர் பட்டத்தினையும் பெற்றார். அமெரிக்க மூத்தோர் பளுதூக்குதல் போட்டியில் 1993-1997 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் இவர் வாகையாளர் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற அர்னால்டு ஸ்ட்ராங்மேன் கிளாசிக் பட்டத்தின் துவக்க ஆண்டில் இவர் வாகையாளர் பட்டம் பெற்றார்.[4]

1996 இல் உலக மல்யுத்த கூட்டமைப்பில் (இப்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்) சேர்ந்ததில் இருந்து, இவர்ஒரு முறை WWF ஐரோப்பிய வாகையாளராகவும், இரண்டு முறை உலக வாகையாளராகவும் ஆனார், 2008 இல் ECW வாகையாளராகவும் ,[5] மற்றும் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் இன் உலக மிகுகன வாகையாளர் பட்டத்தினையும் 2011ஆம் ஆண்டில் பெற்றார்..[6] ஏப்ரல் 2018 இல், ஹென்றி 2018 உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் ஹால் ஆஃப் ஃபேமாக அறிவிக்கப்பட்டார் .[7]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மார்க் ஜெரோல்டு ஹென்றி டெக்சாஸின் ஜூன் 12, 1971 இல் சில்ஸ்பீ நகரில் பிறந்தார்.குழந்தைப் பருவம் முதலே மல்யுத்த போட்டிகளின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆண்ட்ரே தி ஜெயண்ட் இவருக்கு பிடித்த மல்யுத்த வீரர். டெக்சாஸின் பியூமாண்டில் நடந்த ஒரு மல்யுத்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, இளம் ஹென்றி ஆண்ட்ரே இடைகழிக்கு கீழே நடந்து செல்லும்போது அவரைத் தொட முயன்றார், ஆனால் தடுப்பைக் கடந்து சென்றதால் அவர் தடுக்கப்பட்டார்.[8] ஹென்றிக்கு 12 வயதாக இருந்தபோது, அவரது தந்தை எர்னஸ்ட் நீரிழிவு நோயால் இறந்தார்.[9] அவருக்கு 14 வயதாக இருந்தபோது, ஹென்றிக்கு டிஸ்லெக்ஸியா இருப்பது கண்டறியப்பட்டது.[10]

ஹென்றியின் குடும்பத்தில் கிட்டத்தட்ட எல்லா ஆண்களும் சராசரியை விட குண்டானவர்களாக இருந்துள்ளனர், குறிப்பாக அவரது பெரிய மாமா சட், 6 அடி உயரம் மற்றும் சுமார் 500 பவுண்ட்ஸ் எடை கொண்டவராக இருந்துள்ளார். ஹென்றி தனது உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றபோது கால்பந்து விளையாடினார்,

பவர்லிஃப்டிங் ஜிம் ரெக்கார்ட்ஸ் (அதிகாரப்பூர்வமற்றது):

குந்து - 1006   பவுண்ட் (456.5   கிலோ) [8][11] பெஞ்ச் பிரஸ் - 585   பவுண்ட் - 600   பவுண்ட் (265   கிலோ - 272   கிலோ) [12] டெட்லிஃப்ட் - 925   பவுண்ட் (420   கிலோ) [13]

மொத்த பவர் லிஃப்டிங் (அதிகாரப்பூர்வமற்றது) - 2531   பவுண்ட் (1006 + 600 +925)

தனிப்பட்ட பளு தூக்குதல் பதிவுகள்[தொகு]

பளு தூக்குதல் போட்டி பதிவுகள்:

 • ஸ்னாட்ச் : 180.0   கிலோ (396.8   பவுண்ட்ஸ்) [14] (1996 இன் யு.எஸ். நேஷனல்களில் செய்யப்பட்டது )

சான்றுகள்[தொகு]


 1. "Texas Births". Familytreelegends.com. பார்க்கப்பட்ட நாள் February 3, 2008.
 2. "Mark Henry bio". World Wrestling Entertainment. பார்க்கப்பட்ட நாள் June 30, 2009.
 3. Milner, John M.; Oliver, Greg. "Mark Henry". Slam! Sports. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் March 20, 2009.
 4. 4.0 4.1 Milner, John M.; Oliver, Greg. "Mark Henry". Slam! Sports. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் March 20, 2009.
 5. "History Of The European Championship – Mark Henry". World Wrestling Entertainment. August 23, 1999. Archived from the original on February 24, 2008. பார்க்கப்பட்ட நாள் February 25, 2008.
 6. "Mark Henry def. Randy Orton (New World Heavyweight Champion)". World Wrestling Entertainment. September 18, 2011. Archived from the original on August 1, 2012. பார்க்கப்பட்ட நாள் September 20, 2011.
 7. "Mark Henry to enter WWE Hall of Fame". பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
 8. 8.0 8.1 Barnwell, Bill (November 1, 2006). "Mark Henry Talking Wresting Smack: Classic Q&A Part 1". REV Magazine (now defunct).
 9. Smith, Shelley (July 15, 1991). "Heavy Duty; Weightlifter Mark Henry is a prodigious prodigy (page 1)". Sports Illustrated. Archived from the original on January 2, 2013. பார்க்கப்பட்ட நாள் July 22, 2009.
 10. Smith, Shelley (July 15, 1991). "Heavy Duty; Weightlifter Mark Henry is a prodigious prodigy (page 2)". Sports Illustrated. Archived from the original on January 2, 2013. பார்க்கப்பட்ட நாள் July 22, 2009.
 11. Robinson, Jon (May 30, 2006). "Mark Henry Interview – Three 6 Mafia, Smackdown, and pushing weight". IGN.
 12. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on April 19, 2014. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 13. "video: Mark Henry Talks Retirement, Injury, Greatest Wrestlers & Defends Rosenberg (deadlift talk at 4:45)". Runnindisradio. youtube.com. June 13, 2012.
 14. "1996 US WF Senior Nationals (results)". LiftTilyaDie.Com. Archived from the original on செப்டம்பர் 23, 2012. பார்க்கப்பட்ட நாள் October 1, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_ஹென்றி&oldid=3567339" இலிருந்து மீள்விக்கப்பட்டது