உள்ளடக்கத்துக்குச் செல்

மாயா பர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயா பர்மன்
பிறப்பு1971
லாட் எட் கரோன், பிரான்ஸ்
தேசியம்பிரான்ஸ் நாட்டவர்
அரசியல் இயக்கம்பர்மன் குடும்பம்

மாயா பர்மன் (Maya Burman) (பிறப்பு 1971)[1] ஒரு பிரெஞ்சு கலைஞர்.

சுயசரிதை[தொகு]

பர்மன், பிரான்சின் லாட் எட் கரோனில் பிறந்து வளர்ந்தார். இவர் ஆரம்பத்தில் ஒரு கட்டட வடிவமைப்பாளராக, பயிற்சி பெற்றார். ஆனால் அந்தத் தொழில் தன்னை மிகவும் கட்டுப்படுத்துவதாக உணர்ந்த இவர் ஓவியம் வரையத்தொடங்கினார்.[2]. இவர் பேனா, மை மற்றும் நீர் வர்ணங்கள் ஆகியவற்றை முக்கியமாக தனது ஓவியங்களுக்குப் பயன்படுத்துகிறார். இந்த தன்னிச்சையான ஊடகம், தொடர்ச்சியான படைப்புகளை உருவாக்க இவரை ஊக்குவிக்கிறது, ஏனெனில் ஒவ்வொரு ஓவியத்தையும் புதுப்புது யோசனைகளுடன் மேலதிக வேலை செய்து மேம்படுத்துவது அல்லது மறுமுறை புத்தாக்கம் செய்வது போன்றவை கடினமானவையாகக் கருதப்படுகின்றன.[2]. இந்தியா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இவர் செய்த படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

இவர் கலைஞர்களின் குடும்பத்தின் இளைய உறுப்பினர்: இவரது தந்தை சக்தி பர்மன் (கொல்கத்தாவைச் சேர்ந்தவர்), பிரெஞ்சு தாய் மைட் டெல்டெய்ல் இருவரும் முக்கிய கலைஞர்கள்.[1] இவரது உறவினர் ஜெயஸ்ரீ பர்மனும் ஜெயசிறீயின் கணவர் பரேஷ் மைத்தியும் கலைஞர்கள் ஆவர்.

விருதுகள்[தொகு]

  • இளம் ஓவியர்களுக்கான விருது - சலோன் டி கொலம்பஸ் (1997) [1]
  • சன்னோயிஸின் நுண்கலை சங்கத்தின் விருது (1998) [1]
  • சலோன் டி ஆட்டோம்னே பாரிஸின் விருது (2000) [1]
  • வாட்டர்கலர்ஸ் ஓவியம் பிரிவு விருது சலோன் டி கொலம்பஸ் (2001) [1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பர்மனுக்கு 23 வயதில் இந்தியாவில் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன் பிறந்தான். திருமணம் முடிவடைந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பர்மன் தனது மகனுடன் பிரான்சுக்குத் திரும்பினார். [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Mini Chandran-Kurian, "Maya Memsaab", The Times of India, Nov 10, 2002.
  2. 2.0 2.1 Swapna Sathish, "Heart-felt expressions" பரணிடப்பட்டது 2020-01-21 at the வந்தவழி இயந்திரம், The Hindu, Aug 16, 2005.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_பர்மன்&oldid=3224479" இலிருந்து மீள்விக்கப்பட்டது