மாயா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயா சிங்
Maya Singh
குவாலியர் நிகழ்ச்சி ஒன்றில் மாயா சிங்
நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர்
மத்தியப் பிரதேச அரசு
பதவியில்
2016 – திசம்பர் 2018
பின்னவர்ஜெயவர்தன் சிங்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2013 – திசம்பர் 2018
பின்னவர்முன்னாலால் கோயல்
தொகுதிகுவாலியர் கிழக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஆகத்து 1950 (1950-08-15) (அகவை 73)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்தயானேந்திர சிங்
வாழிடம்குவாலியர்
இணையத்தளம்http://www.mayasingh.in
Source 1

மாயா சிங் (பிறப்பு: ஆகத்து 15, 1950) என்பவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தை மாநிலங்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். மாயா சிங் 2016ஆம் ஆண்டு வரை 'பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு' மற்றும் 2016 முதல் திசம்பர் 2018 வரை 'நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி' இலாகா பொறுப்பினை வகித்த மத்தியப் பிரதேச அரசின் அமைச்சர் ஆவார்.[1]

இவர் 2013ஆம் ஆண்டு திசம்பர் 8ஆம் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் குவாலியர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 59,824 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gwalior Assembly Election: Final Result 2013 (Vidhan Sabha)". SouLSteer. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_சிங்&oldid=3681790" இலிருந்து மீள்விக்கப்பட்டது