மாயா எஸ்டியான்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயா எள்டியான்டி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்மாயா எஸ்டியான்டி
பிறப்பு27 சனவரி 1976 (1976-01-27) (அகவை 48)
சுரபையா, இந்தோனேசியா
இசை வடிவங்கள்பாப் இசை, ஜாஸ நடனம், பாரம்பரிய இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்

பாடலாசிரியர் நடனக்கலைஞர் பாடகர் இசைத் தயாரிப்பாளர் தொழிழ்அதிபர் தொலைக்காட்சி பிரபலம்

நடிகை
இசைத்துறையில்2003 முதல் தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்சோனி மியூசிக் இந்தோனேசியா

மாயா எஸ்டியான்டி (பிறப்பு 27 ஜனவரி 1976). இந்தோனேசிய நாட்டைச் சோ்ந்த இசைக்கலைஞர், இசை தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகி, நடிகை, தொழிலதிபர், திறமை நிகழ்ச்சி நடுவா் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார். இவா் சக இசைக்கலைஞர் அஹ்மத் தானியுடனான திருமணத்திற்கு பிறகு மியா அஹ்மத் என்று அழைக்கப்படுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

எஸ்டியான்டி 1976 ஜனவரி 27 அன்று கிழக்கு ஜாவாவின் சுரபயாவில் பிறந்தார். ஹர்ஜோனோ சிஜித் மற்றும் அவரது மனைவி குஸ்தினிக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தை இவராவார்.. [1] [2] [3] மேலும் இந்தோனேசிய தேசியவாத முஸ்லீம் தலைவரும், தேசியக் கதாநாயகர் விருது பெற்றவருமான ஜோக்ரோமினோடோவின் மகன் வழிப் பேத்தி ஆவார். [4]

குழந்தையாக இருந்த போது எஸ்டியான்டி பெரும்பாலும் தனது வகுப்புத் தோழர்களுடன் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார். வாராந்திர பொழுதுபோக்கு இதழான டேப்ளாய்ட் நோவாவுக்கு அளித்த பேட்டியில், சுரபயாவில் உள்ள யோஹனஸ் கேப்ரியல் கத்தோலிக்க தொடக்கப்பள்ளியில், ஒரு முறை வகுப்புத் தோழரை ஒரு பொருளைக் கொண்டு மிகவும் கடினமாகத் தாக்கியதை நினைவு கூர்ந்தார். [3] அந்த நேரத்தில் அவர் இசையையும் கற்றுக் கொண்டார், தான் இடம்பெற்றிருந்த அணிவகுப்பு இசைக்குழுவை ஒரு தேசிய வாகையர் பட்டப் போட்டியில் தனது பியானோ இசையால் வென்றெடுத்தார். [3]

இசைப்பயணம்[தொகு]

கிழக்கு ஜாவாவின் சுரபயாவில் பிறந்த எஸ்டியான்டி, சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் காட்டினார், தொடக்கப்பள்ளியில் இருந்தபோதே அணிவகுப்பு இசைக்குழு போட்டியில் வென்றார். உயர் தொடக்கநிலைப் பள்ளியில் படிக்கும் போது இசைவட்டு இயக்குநர் பயிற்சியைத் தொடங்கினார். அந்த சமயத்தில் முதன் முதலாக தானியை சந்தித்தார். இந்தோனேசியா பல்கலைக்கழகத்தில் படித்த பிறகு, எஸ்டியான்டி தேவா என்ற இசைக் குழுவில் தனது 19 ஆம் வயதில் ஒரு பின்னணி பாடகராக சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டில், அவரும் தானியும் சோ்ந்து இசை இரட்டையர் ரத்து என்ற இசைக்குழு தொடங்க முடிவெடுத்தனர். எஸ்டியான்டி இசையை இசைக்க, மற்ற பெண்கள் பாடல்களைக் பாடினர்.   - முதலில் பிங்கன் மம்போ, பின்னர் முலான் ஜமீலா   ஆகியோர் இந்த இசைக்குழவில் இணைந்து பாடினார். ரத்து என்ற பெயரிடப்பட்ட இந்த இசைக்குழு அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. 2007 இல் இந்த இசைக்குழு கலைக்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 2008 இல் கசப்பான விவாகரத்துக்குப் பிறகு, எஸ்டியான்டி மே சானுடன் டியோ மியாவை உருவாக்கினார். அவர் தற்போது தனது லு மொய்சிக் முத்திரை மூலம் இசையை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

எஸ்டியண்டியும் தானியும் 23 செப்டம்பர் 2008 அன்று விவாகரத்து செய்தனர். திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகளில் அஹ்மத் அல் கசாலி, அஹ்மத் எல் ஜல்லலுடின் ரூமி, மற்றும் அப்துல் கோடிர் ஜெய்லானி ஆகிய மூன்று மகன்களைப் பெற்ற தம்பதியரின் பிரிவினைக்கு பின்னரும் இணக்கமாக இருக்கவில்லை; தனியை துஷ்பிரயோகம் செய்ததாக எஸ்டியான்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார், [5] மற்றும் தானி தங்கள் குழந்தைகளை எஸ்டியன்டியின் பாதுகாப்பில் செல்ல மறுத்துவிட்டார் . இதனால் எஸ்டியான்டி, இந்தோனேசியாவின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். [6] 2011 ஆம் ஆண்டில் அவரது கனவா் தானி முலான் என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களுக்கு ஒரு குழந்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது, [1] [7] [8] தானி 2012 இல் எஸ்டியான்டி குழந்தகளை சந்திப்பதற்கு வருகை உரிமைகளை வழங்கினார். [9] இருப்பினும் தன்னால் தனது குழந்தைகளை எளிதில் சந்திக்க முடியவில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டை சமர்ப்பித்தார், . 14 மே 2013 அன்று உச்சநீதிமன்றம் குழந்தைகள் ஒரு முடிவை எடுக்கத் தகுதியுள்ளவர்களாகக் கருதப்படுவதால் குழந்தைகளே தங்கள் பெற்யோரில் ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்தனர். அதற்கு தானியும் ஒப்புக்கொண்டார். [10]

மேற்கோள்கள்[தொகு]

அடிக்குறிப்புகள்
  1. 1.0 1.1 Asrianti 2009, Maia: Bearing it all.
  2. Nova 2008, Tak Ada Kata Mundur.
  3. 3.0 3.1 3.2 Nova 2005, Prestasi Merosot Tajam.
  4. Tempo 2011, Ilmu Tjokroaminoto.
  5. Jakarta Globe 2011, Dhani Rages.
  6. Jakarta Post 2010, Maia's long battle.
  7. Jakarta Globe 2010, Maia Says New Hubby.
  8. Jakarta Post 2011, Dhani, Maia blame each other.
  9. Okki 2012, Dapat Izin Ahmad Dhani.
  10. "PK Terkabul, Anak Pilih Maia Atau Dhani?". 28 May 2013. Archived from the original on 17 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 31 மார்ச் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_எஸ்டியான்டி&oldid=3567326" இலிருந்து மீள்விக்கப்பட்டது