மாத நாவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாத நாவல் என்பது தமிழ் இதழ்களின் ஒரு வடிவம் ஆகும். இவை மாத இதழாக வந்தவை ஆகும். இவை மாத இழர்கள் என்றாலும் இவற்றில் ஏதாவது ஒரு ஆசிரியர் 100 பக்கத்தில் எழுதிய ஒரு புதினத்தை மட்டும் முழுமையாக கொண்டிருக்கும். வேறு விசயங்களுக்கு பெரும்பாலும் இடம் இருக்காது. இதில் வரும் புதினங்கள் தீவிர இலக்கியத்தில் இருந்து மாறுபட்டு வெகுசனங்களை ஈர்க்கூடியனவாக இருக்கும்.[1]

மாத நாவல்கள் 1970களின் இறுதியில் நல்ல வரவேற்பை பெற்றவையாக இருந்தன. பதிப்பாளர் ஜி. அசோகன் இத்துறையில் நுழைந்த பிறகு மேல்நாட்டு பாணியில் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளதக்கதாக சிறிய வடிவில் பாக்கெட் நாவல் என்ற வடிவில் மாத நாவலை 1986 இல் வெளியிட்டார். இந்த பாக்கெட் நாவல் விற்பனையில் சாதனைப் படைத்து ஒரு இலட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையானது.[2] இதனால் புற்றீசல் போல பல மாத நாவல்கள் தோன்றின. வர இதழ்கள், நாளிதழ்கள், மாத இதழ்களை நடத்தியவர்களும் மாத நாவல்களை வெளியிட்டனர். மாத நாவல்கள் நாளிதழ்களை அச்சடிக்கப் பயன்படுத்தபட்ட தாளிலேயே பெரும்பாலும் அச்சிடப்பட்டன.[3]

பாலகுமாரன், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டைப் பிரபாகர், மகரிஷி, அணுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, சுபா, புஷ்பா தங்கதுரை, ஆர்னிகா நாசர், தேவிபாலா, இந்திரா சௌந்தர்ராஜன், ரமணிசந்திரன், காஞ்சனா ஜெயதிலகர்,[4] ஆர். மணிமாலா, சுமதி, வி. உஷா, வித்யா சுப்பிரமணியம், மதுமதி[5] என பலர் மாத நாவல்களில் ஏராளமாக எழுதினர். வாலி, சுஜாதா ஆகியோரும் துவக்கத்தில் மாத நவல்களில் எழுதினர். ஒரு கட்டத்தில் சுஜாதா மாத நாவல்களில் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். அது குறித்து கேட்டதற்கு தான் தொடருந்தில் சென்று கொண்டிருந்தபோது வாசகர் ஒருவர் மாத நாவலை படித்து முடித்த பிறகு சன்னலில் தூக்கி எறிந்ததைப் பார்த்ததாகவும், இந்த வகையிலேயே மாத நாவல்களுக்கு வாசகர் மத்தியில் மதிப்பிருப்பதை தான் உசர்ந்ததாக குறிப்பிட்டார். அது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இணையப் பயன்பாடு அதிகரித்தப்பிறகு மாத நாவல்கள் தங்கள் வரவேற்பை இழந்தன.

மாத நாவல்கள் பட்டியல்[தொகு]

 • ராணிமுத்து (ராணி இதழின் வெளியீடு)
 • மாலைமதி (குமுத்ததின் வெளியீடு)
 • மோனா (சாவி இதழின் வெளியீடு)
 • குங்குமச்சிமிழ் (குங்கும் இதழின் வெளியீடு)
 • சுஜாதா
 • மேகலா
 • மணியன் மாத இதழ்
 • கதைக்கதிர்
 • மெட்டி
 • பாக்கெட் நாவல்
 • கிரைம் நாவல்
 • குடும்ப நாவல்
 • எ நாவல் டைம்
 • உங்கள் ஜூனியர்
 • சுபயோகம்
 • சூப்பர் நாவல்
 • பல்சுவை நாவல்
 • லேடிஸ் நாவல்
 • செவில்
 • ஏ ஒன் நாவல்
 • கோஸ்ட்
 • கிளிக் நாவல்
 • அழகிய மங்கையர் நாவல்
 • அழகிய நந்தினி
 • டே நாவல்
 • டெவில் நாவல்
 • திரில் நாவல்
 • திகில் நாவல்
 • டெரர் நாவல்
 • ரம்யா நாவல்
 • ஊதாப்பூ
 • ராஜா ராணி
 • ஜாப் கைடு லைன்ஸ்
 • பாக்கெட்புக்ஸ்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத_நாவல்&oldid=3722592" இருந்து மீள்விக்கப்பட்டது