மாத்தறை காசிம் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாத்தறை காசிம் புலவர் (இறப்பு: 1956) இலங்கையின் தென் மாகாணம் மாத்தறையைச் சேர்ந்த ஒரு புலவர். தமிழ் - சிங்களப் புலமை மிக்கவர். சிங்கள இலக்கிய மரபான 'கவிகொல' (கவிதாவோலை) எனும் அமைப்பில் கவிதைகளை யாத்திருக்கின்றார்.

சமூகத்தில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை கவிதைகளாக்கி, அவற்றை அச்சிட்டு விற்பனை செய்திருக்கின்றார். ஞானக்கண், காலிக் கேலியா கோட்டக் கோழியா, புத்திப்பாட்டு, தரீக்காச் சண்டை, கதிர்காமக் கும்மி, சோனகரே முஸ்லிம் எனப் பல சிறுபிரசுரங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

'இஸ்லாமிய வழி இருளகற்றும் ஒளி' என்ற சிங்களப் பாடல் நூல் சிங்கள - தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அச்சிடப்பட்டதொரு நூலாகும்.

இரசூல் மாலையின் பெரும்பகுதியையும், சுபுஹான மெளலிது எனும் நூலின் ஒரு பகுதியையும் இவர் சிங்களத்தில் மொழிமாற்றி வெளியிட்டுள்ளார்.

கமருஸ்ஸமான், பாதுசா, ஸபர் முதலாம் நாடகங்களை மாத்தறையில் மேடையேற்றியுள்ளார்.

உசாத்துணை[தொகு]

  • மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு