மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Basic mvc.png

மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம் (Model–view–controller, MVC) என்பது ஒரு மென்பொருள் கட்டமைப்புக் கோலம். மாதிரி தரவையும் அவற்றைக் கையாழுவது தொடர்பான வணிக விதிகளையும், காட்சி செயலியின் இடைமுகத்தையும், கட்டுப்பாடு மாதிரிக்கும் இடைமுகத்துக்கும் இடையேயான பரிமாறியாகவும் செயற்படுகிறது. அதாவது கட்டுப்பாடு இடைமுகத்தில் இருந்து கட்டளைகளைப் பெற்று மாதிரிக்கு ஏற்றவாறு அனுப்பதலையும், அடுத்த காட்சிகளைத் தெரிவு செய்து இடைமுகத்து அனுப்பதலையும் செய்கிறது. இவ்வாறு பிரித்து வடிவமைப்பதன் மூலம் ஒவ்வொன்றும் மற்றதை தங்கியிருக்கும் தன்மை குறைந்து வடிவமைப்பது, பாரமரிப்பது, மாற்றங்களை ஏற்படுத்துவது இலகுவாகிறது.

எ.கா[தொகு]

ஒரு order processing ஒருங்கியத்தைக் கருத்தில் கொள்க. இங்கு இதற்கு தேவையான பட்டியல்கள் அல்லது தரவு வடிவமைப்பும் அவற்றுக்கிடையேயான தொடர்பும் மாதிரி ஆகும். இந்த தரவுகளை பெறவும் கையாளவும் பயன்படும் API கட்டுப்பாட்டகம் ஆகும். பயனர் ஊடாடும் இடைமுகம் காட்சி ஆகும்..

வெளி இணைப்புகள்[தொகு]