மாதவிடாய் குப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடதுபுறம் மணி வடிவத்தில் அமைந்துள்ள ஓர் மாதவிடாய் குப்பி தண்டை சேர்க்காது 2 அங்குலம் (5.7 செமீ) நீளமுள்ளது. வலது புறத்திலுள்ள களைந்தெறியக்கூடிய கருத்தடை சாதனம் போன்றுள்ள மென்குப்பி 3 அங்குலம் (7 செமீ) விட்டமுள்ளது. இடதுபுறம் மணி வடிவத்தில் அமைந்துள்ள ஓர் மாதவிடாய் குப்பி தண்டை சேர்க்காது 2 அங்குலம் (5.7 செமீ) நீளமுள்ளது. வலது புறத்திலுள்ள களைந்தெறியக்கூடிய கருத்தடை சாதனம் போன்றுள்ள மென்குப்பி 3 அங்குலம் (7 செமீ) விட்டமுள்ளது.
இடதுபுறம் மணி வடிவத்தில் அமைந்துள்ள ஓர் மாதவிடாய் குப்பி தண்டை சேர்க்காது 2 அங்குலம் (5.7 செமீ) நீளமுள்ளது. வலது புறத்திலுள்ள களைந்தெறியக்கூடிய கருத்தடை சாதனம் போன்றுள்ள மென்குப்பி 3 அங்குலம் (7 செமீ) விட்டமுள்ளது.

மாதவிடாய் குப்பி (menstrual cup) மாதவிடாய் காலத்தில் வெளியேறும் நீர்மங்களை சேகரிக்கும் வண்ணம் யோனியின் உள்ளே அணியப்படும் நெகிழ்வான குப்பி அல்லது தடை ஆகும். பஞ்சுத்தக்கைகளைப் போன்றோ அணையாடைகளைப் போன்றோ உறிஞ்சாது இவை நீர்மங்களை சேகரிக்கிறது. இவை பொதுவாக பாதுகாப்பான மற்றும் ஒவ்வாமை குறைந்த மருத்துவத்தர சிலிகோனிலால் ஆக்கப்படுகின்றன. இந்தக் குப்பிகளை மீளவும் பயன்படுத்தக் கூடுமாகையால் பஞ்சுத்தக்கைகளை விட இவை செலவுத்திறன் மிகுந்தும் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காதும் உள்ளன. ஒரு குப்பியை 5-10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம். பஞ்சுத்தக்கைகளைவிட கூடுதலான கொள்ளளவும் கொண்டுள்ளன. சில மணி நேரத்திற்கொருமுறை பஞ்சுத்தக்கைகளையும் அணையாடைகளையும் மாற்ற வேண்டியிருக்க இக்குப்பியை 12 மணி நேரத்திற்கொருமுறை வெறுமையாக்கினால் போதுமானது. மேலும் நீர்மங்களை யோனிச் சுவர்கள், பிறப்புறுப்புகளிலிருந்து விலக்கி வைப்பதாலும் காற்றுக்கு வெளிப்படுத்தாததாலும் துர்நாற்றம் மற்ற முறைகளை விட குறைவாகவே உள்ளது.

மாதவிடாய் குப்பிகளை பயன்படுத்தத் துவங்கும்போது கூடுதல் நேரமெடுக்கலாம். சிலருக்கு உள்ளிடுவதும் அப்புறப்படுத்துவதும் பஞ்சுத்தக்கைகளை விடக் கடினமாக இருக்கலாம்.[1] இவற்றை அடிக்கடி சுத்தப்படுத்துவது அவசியமாகும். சில தயாரிப்பாளர்கள் 12 மணிக்கொருமுறை குடிநீரும் மென்தூய்மிப்புப் பொருளும் கலந்து சுத்தப்படுத்துவதை பரிந்துரைக்கின்றனர்.[2] வேறு சில தயாரிப்பாளர்கள் வெறுமையாக்கப்படும்போது நன்கு துடைத்து விசாய்க்கால முடிவில் மென்மையான வழலை கொண்டு சுத்தப்படுத்துவதைப் பரிந்துரைக்கின்றனர்.[3]

மேலும் காண்க[தொகு]

சான்றுகோள்கள்[தொகு]

  1. Pardes, Bronwen. Doing It Right: Making Smart, Safe, and Satisfying Choices About Sex. Simon & Schuster (2007), p. 17. ISBN 1-4169-1823-X.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-07-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-12-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவிடாய்_குப்பி&oldid=3224367" இருந்து மீள்விக்கப்பட்டது